அம்மாம் பெரிய ரஜினிக்கே கல்யாணம் கசக்கல! சுள்ளான் நீங்க இப்படி பண்ணலாமா? தனுஷை தாளிக்கும் தமிழகம்..

Published : Jan 19, 2022, 01:06 PM IST
அம்மாம் பெரிய ரஜினிக்கே கல்யாணம் கசக்கல!  சுள்ளான் நீங்க இப்படி பண்ணலாமா? தனுஷை தாளிக்கும் தமிழகம்..

சுருக்கம்

ரஜினி தன் மனைவி லதாவை ‘ஜில்லு’ என்றுதான் அழைப்பார். இது அவரே வெளியே சொன்ன தங்களின் பர்ஷனல் ஹிண்ட். 41 வருட திருமண வாழ்க்கை அம்மாம் பெரிய ரஜினிக்கு எந்த சலிப்பையும் ஏற்படுத்தவில்லை..

 ‘ஆமாய்யா ராத்திரியாச்சுன்னா என் பெட்ல ஒரு பொண்ணும், மதுவும் வேணும். அதுக்கென்ன இப்ப?’ என்று ரஜினி தந்த வாக்குமூலம் அவரது இமேஜை கெடுத்ததில்லை. மாறாக, போலி முகமூடி அணியாமல், உண்மையை ஒப்புக் கொள்ளும் உயர்ந்த வி.வி.ஐ.பி! எனும் பெயரை பெற்றுத் தந்தது. இன்று இதை சுட்டிக்காட்டிதான் அவரது மாஜி மருமகனாக இருக்கின்ற தனுஷை வறுத்தெடுக்கின்றனர்.

ரஜினி பிரபல நடிகர் எனும் நிலையை தாண்டி, சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நின்ற நேரம். அடிக்கடி கோபப்படுவார், சட்டென கை நீட்டுவார், கசப்பான உண்மையை மூஞ்சிக்கு நேராக பேசுவார். ஆனால் அடிப்படையில் நல்லவர், வெளிப்படையானவர், போலியை விரும்பாதவர், தான் செய்த தப்புக்கு ஓப்பனாக வருத்தம் சொல்லகூடியவர்.

அப்படித்தான் ஒரு சூழலில், இரவில் தன் பெட் ரூமில் என்ன இருக்கும்? யார் இருப்பார்கள்! என்று ஓப்பனாக போட்டுடைத்தார். அப்பேர்ப்பட்ட ரஜினிகாந்தை பேட்டி எடுக்க வந்த கல்லூரி மாணவியான லதா காதலிக்க துவங்கினார். ரஜினியும் சம்மதித்தார். அந்த நொடியில் இருந்து ரஜினியின் பர்ஷனல் வாழ்க்கை வேறு விதமாய் திரும்பியது. அதாவது நல்வழிப்பட்டது.

ரஜினி தன் மனைவி லதாவை ‘ஜில்லு’ என்றுதான் அழைப்பார். இது அவரே வெளியே சொன்ன தங்களின் பர்ஷனல் ஹிண்ட். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். 41 வருட திருமண வாழ்க்கை அம்மாம் பெரிய ரஜினிக்கு எந்த சலிப்பையும் ஏற்படுத்தவில்லை தன் ஒன்  அண்டு ஒன்லி லதாவுடன்.

ரஜினியின் மகள்களில் ஒருவர் ‘மாற்றுத்திறனாளி’ என்று அந்த காலத்தில் ஒரு வதந்தி உண்டு. அதற்கு கூட ரஜினி பெரிதாய் வருந்தவில்லை. ஆனால், இரு மகள்களும் ‘விவாகரத்து ‘எனும் வட்டத்தினுள் நுழைந்து வெளியேறுவதைதான் அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

ஆக்ஸிடெண்டலாக நடிக்க வந்த தனுஷ், தனது அண்ணன் செல்வராகவனின் பட்டை தீட்டலில் மிக முக்கிய நடிகராக உயர்ந்தார் மிக சிறிய வயதில். ரஜினி படத்தை  முதல் நாள், முதல் ஷோ பார்ப்பதையே பெரும் வரமாக கருதும் தமிழக ஆண்களுக்கு இடையில் அவர் ரஜினியின் மூத்த மருமகனாகவே ஆனார். ரஜினியே தன்னை ‘மாப்ள நீங்க’ என்று அழைப்பதை நினைத்து வானத்தில் மிதந்தவர் தனுஷ். இந்நிலையில், அவரது மகளை விட்டு தான் பிரிவதை பூசி மெழுகல் வார்த்தைகளில் தெரிவித்துள்ள தனுஷை நோக்கி….

‘சுள்ளான் படத்துல நீங்க வயசுக்கு மீறின ஆக்‌ஷன் காட்டுனப்ப உங்களோட ஓவர் ஆக்டிங் கடுப்பாச்சு. இன்னைக்கு உங்களோட பர்ஷனல் லைஃப்லேயும் ஓவரா பிஹேவ் பண்றீங்க. இது நல்லாயில்ல தனுஷ்! என்னதான்  இருந்தாலும் ரஜினிக்காக நீங்க ஐஸ்வர்யாவை தாங்கித்தான் இருக்கணும்’ என்கின்றனர்.

என்ன சொல்ல போகிறார் தனுஷ்!?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?