வக்கீல் வேடத்தில் வனிதா..மாஸ் வெற்றியுடன் பிக் பாஸில் என்ட்ரி கொடுக்க பிளனா?

By Kanmani PFirst Published Jan 19, 2022, 12:31 PM IST
Highlights

தனி மனித உணர்வையும் தற்காப்பு சட்டத்தையும் விரிவாகப் பேசும் 'சிவப்பு மனிதர்கள் படத்தில் 'புரட்சிகரமான வக்கீல் வேடத்தில் வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார். 

BTK FILMS சார்பில் B.T அரசகுமார் M.A அவர்கள் தயாரிப்பில் அன்பு சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சிவப்பு மனிதர்கள்’. சமூக கருத்து பேசும் பொழுதுபோக்கு திரைப்படங்கள் மக்களிடம் வரவேற்பு பெறுவதோடு, சமூகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி இந்திய திரையுலகில் இதுவரை சொல்லப்படாத சட்டத்தின் மறுபக்கத்தை சொல்லி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்த இருக்கிறது வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிவப்பு மனிதர்கள்’ திரைப்படம்.

ஜாதி மதம் இனம் மொழி கடந்த அபூர்வமான உணர்வு காதல், இங்கு இணைந்த காதலர்களை விட பிரிந்தவர்கள் தான் அதிகம். ‘சிவப்பு மனிதர்கள்’ படத்திலும் காதலை, காதல் சார்ந்த உணர்வுகள் எதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. பல எதிர்ப்புகளை கடந்து காதலர்கள் இணைய நினைக்கையில் பல தடைகள் பல கொலைகள் கடந்து போகிறது. இறுதியில் நீதிமன்றத்தை நாட நீதிமன்றத்தில் விருவிருப்பான தீர்ப்பு அனைவரையும் வியக்க வைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் புரட்சிகரமான வக்கீல் வேடத்தில் வனிதா விஜயகுமார் மற்றொரு வக்கீலாக லிவிங்ஸ்டன் நடிக்க நீதிபதியாக சமீபத்தில் மறைந்த கவிஞர் பிறைசூடன் நடித்துள்ளார். மற்றும் கதையின் நாயகனாக ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகியாக கருப்பசாமி குத்தகைதாரர் மீனாட்சி மற்றொரு இளம் ஜோடியாக புதுமுகம் சத்யா அனு கிருஷ்ணா நடிக்க கஞ்சாகருப்பு, ராஜசிம்மன், சோனா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பிக் பாஸ் ரேஷ்மா, சந்தியா, பெஞ்சமின், வேல்முருகன், ஆதேஷ் பாலா, சின்ராசு, லேகா ஸ்ரீ, உமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சீனுவாச கதிர் கலை இயக்குநராக பணியாற்ற,  எம் தங்கபாண்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.என்.ராஜ் கீர்த்தி  படத்தொகுப்பு செய்ய, விஜய் மந்தாரா இசையமைத்துள்ளார், கவிஞர் விவேகா, இயக்குநர் அன்பு சரவணன் பாடல்கள் எழுத, ரவி தேவ், பவர் சிவா நடனம் அமைத்துள்ளனர். தீப்பொறி நித்யா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

’சிவப்பு மனிதர்கள்’ திரைப்படத்தில் நீதிமன்றக் காட்சி ஹைலைட்டாக இருக்கும் என்று கூறிய படக்குழுவினர், படத்தின் டப்பிங் பணிகள் நிறைவுபெற்று பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், வரும் பிப்ரவரி மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பிக் பாஸ் சிறப்பு ஓடிடி தளத்துக்காக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட உள்ளது. பிரத்யேகமாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக தயாராகும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ளது. 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ள இந்நிகழ்ச்சியின் புரோமோ நேற்று வெளியானது. இதில் முந்தைய சீசன்களில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்களை களமிறக்க உள்ளனர். மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளார்களாம்.

அதன்படி முதல் சீசனில் இருந்து சுஜா வருணி, பரணி, ஜூலி, சினேகன் ஆகியோரும், இரண்டாவது சீசனில் இருந்து ஐஸ்வர்யா தத்தா, ஷாரிக், தாடி பாலாஜி ஆகியோரும், மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி, வனிதா, ஷெரின் ஆகியோரும், நான்காவது சீசனில் அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரும், 5-வது சீசனில் இருந்து சுருதி, நதியா சங் மற்றும் இசைவாணி கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

click me!