நடிப்பு “அசுரன்” என்பதை நிரூபித்து காட்டிய தனுஷ்... ஒரே ஷாட்டில் சும்மா புகுந்து விளையாடும் வீடியோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 17, 2020, 12:08 PM IST
நடிப்பு  “அசுரன்” என்பதை நிரூபித்து காட்டிய தனுஷ்... ஒரே ஷாட்டில் சும்மா புகுந்து விளையாடும் வீடியோ...!

சுருக்கம்

அதற்கு காரணம் இளமை தோற்றத்தில் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ், முதிய தோற்றத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். 

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் “அசுரன்”. இந்த படத்தில் நடிகர் தனுஷ் தன்னுடைய முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் மிரட்டி இருந்தார். வெக்கை என்ற நாவலை தழுவி வெற்றிமாறன் இயக்கிய இந்த படத்தை தாணு தயாரித்திருந்தார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து இருந்தார். மேலும் தனுஷின் இளைய மகனாக பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸின் மகன் கென் கருணாஸும், மூத்த மகனாக பிரபல இண்டிபென்டென்ட் சிங்கர் டிஜே-வும் நடித்திருந்தனர். 

இதையும் படிங்க: “என் புருசனை திருடிய நயன்தாராவை எங்கு பார்த்தாலும் உதைப்பேன்”... பிரபுதேவா மனைவி ஆவேசம்...!

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் 100 நாட்களை கடந்து தியேட்டர்களில் ஓடியதை அடுத்து வெற்றி விழா கொண்டாடப்பட்டது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அசுரன் பெற்ற சாதனையை பார்த்து, இயக்குநர் வெற்றி மாறனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரிசை கட்டி நின்றன. ஏன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கூட அசுரன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஆர்வமாக இருப்பதாகவும், அதை வெற்றிமாறனே இயக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவின. 

இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!

கொரோனா ஊரடங்கிற்கு முன்பு தான், தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்றார் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ், தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷை வைத்து ஷூட்டிங் நடத்தி வந்தனர். அடுத்தடுத்து பல மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படி அடுக்கடுக்கான பாராட்டுக்களை பெற்ற அசுரன் படத்தில் தனுஷ் நடிப்பு மிகவும் புகழப்பட்டது. 

இதையும் படிங்க: ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் செம்ம கவர்ச்சி... ஊரடங்கு நேரத்தில் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் ஷாலு ஷம்மு!

அதற்கு காரணம் இளமை தோற்றத்தில் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ், முதிய தோற்றத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். அசுரன் படத்தில் முக்கியமான காட்சியான இறுதி சண்டை காட்சிகளின் மேக்கிங் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஒரே ஷாட்டில் சுத்தி நிற்கும் அனைவரையும் தனுஷ் பந்தாடும் அந்த காட்சியை நீங்களே பாருங்கள்... 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?
தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!