Haters இல்லாமல் அணைத்து ரசிகர்களையும் கவர்ந்த விக்ரம்! ரகசியம் இது தான்!

Published : Apr 17, 2020, 11:04 AM IST
Haters இல்லாமல் அணைத்து ரசிகர்களையும் கவர்ந்த விக்ரம்! ரகசியம் இது தான்!

சுருக்கம்

திரையுலகில் அறிமுகமாகும் அணைத்து இளம் நடிகர்களுக்குமே... எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற வெறி இருக்கும். இதே வெறியோடு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகர் விக்ரம்.  

திரையுலகில் அறிமுகமாகும் அணைத்து இளம் நடிகர்களுக்குமே... எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற வெறி இருக்கும். இதே வெறியோடு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகர் விக்ரம்.

வளர்ச்சிக்கு வழி வகுத்த சேது:

1990 ஆம் ஆண்டு 'என் காதல் கண்மணி' என்கிற படத்தின் மூலம் இவர் ஒரு நடிகராக அறிமுகமாகி இருந்தாலும், இவருடைய திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால், இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம், 1999 ஆம் ஆண்டு நடித்த 'சேது' திரைப்படம் தான்.

தேர்வு செய்து நடிக்க துவங்கிய படங்கள்:

'சேது' படத்தின் மூலம் கிடைத்த வெற்றியை தக்க வைத்து கொள்ள, தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும், ஆழமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்க துவங்கினார். அந்த வகையில், இவர் நடிப்பில் வெளியான... 'காசி'  , 'தூள்', , 'சாமி', போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தது.

Haters இல்லாமல் வளர்ந்த விக்ரம்:

பொதுவாக அணைத்து நடிகர்களுக்கும், ரசிகர்கள் என ஒருதரப்பினர் இருந்தார்கள் என்றால், Haters என மற்றொரு தரப்பினர் இருப்பார்கள்.

ஆனால் நடிகர் விக்ரமுக்கு மட்டும் அது விதிவிலக்கு எனலாம். விஜய், ஆஜித், சூப்பர் ஸ்டார், என அணைத்து தரப்பு ரசிகர்களும் விக்ரமின் படத்தை ரசிப்பார்கள். 

ரகசியம்:

அனைவரையும் கவரும்படி அப்படி என்ன தான் இவரிடம் ரகசியம் உள்ளது என பலருக்கும் தோன்றும். இவரின் ரகசியம் பெரிதாக ஒன்றும் இல்லை. வெளியிடத்தில் பிரபலம் என்கிற பந்தா, சிறிதும் இன்றி அனைவருடனும் சிரித்து பேசும் பழக்கம் உடையவர் விக்ரம். செல்பி என்றாலும் ஒரு போட்டோ என யாரவது தயங்கி வந்து கேட்டால் கூட, கண்டிப்பாக என முகம் சுழிக்காமல் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்வார்.

முக்கியமாக, எந்த நடிகரை பற்றியும் இவர் பட விழாக்களில் ஒரு வார்த்தை கூட விமர்சித்து பேசியதே இல்லை. பின் எப்படி இவருக்கு Haters இருப்பார்கள்.

54 ஆவது பிறந்தநாள்:

நடிகர் விக்ரம், இன்று தன்னுடைய 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையிலும், அறிமுகமாகும் போது, இவர் மனதில் எப்படி திரையுலகில் சாதிக்க வேண்டும் என்கிற வெறி இருந்ததோ... தற்போது அதே வெறி உள்ளது. இதற்க்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு கோப்ரா திரைப்படம். பல்வேறு வேடத்தில், அதற்காக உடலை ஏற்றி இறக்கி, கஷ்டப்பட்டு நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!