
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சமூக விலகல் மட்டுமே மக்களின் உயிரை காக்கும் ஒரே வழியாக உள்ளது. அதனால் தான் இன்றுடன் நிறைவடையவிருந்த ஊரடங்கை பாரத பிரதமர் மோடி அவர்கள் மே 3ம் தேதி வரை நீட்டித்துள்ளார். இருப்பினும் ஊரடங்கு உத்தரவால் திரைத்துறையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
இதனால் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் கொஞ்சம் உதவினால் பெப்சி தொழிலாளர்களுக்கு கஞ்சி சோறாவது கொடுக்கலாம் என அந்த அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் லட்சங்களை வாரி வழங்கினார். ஹீரோக்களுக்கு சமமாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவில் உண்டு. அவர்களில் நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் தவிர வேறு யாரும் உதவிக்கரம் நீட்டியதாக தெரியவில்லை.
இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!
தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் நிவாரண நிதி வழங்கும் விஷயத்தில் தல அஜித்தை பின்பற்றியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், கொரோனா நிவாரணம் வழங்காதது பெரும் சர்ச்சையாக இருந்தது. இந்த சமயத்தில் அதிரடியாக ஒரே நாளில் மத்திய அரசுக்கு 50 லட்சம், மாநில அரசுக்கு 50 லட்சம், பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்சம் என ஒரே நாளில் 1.25 கோடி ரூபாயை அதிரடியாக அறிவித்தார்.
இதையும் படிங்க: குழந்தை பெற்ற பிறகும் குறையாத கவர்ச்சி... பேண்ட் போடாமல் ப்ரீயாக போஸ் கொடுத்த எமி ஜாக்சன்...!
அதேபாணியில் தான் நடிகர் ராகவா லாரன்ஸும் ஒரே நாளில் 3 கோடி நிதி கொடுத்து அசத்தினார். தற்போது நடிகை காஜல் அகர்வால் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சிக்கு ரூ.2 லட்சமும், தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரா அரசுக்கு ரூ. 1 லட்சமும், தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சமும் ஆக மொத்தம் 6 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.