இயக்குனர் பாலா - பாரதிராஜாவுக்கு போட்டியா? 'குற்றபரம்பரை' நாவலை படிக்கும் மற்றொரு இயக்குனர்!

By manimegalai aFirst Published Apr 16, 2020, 7:35 PM IST
Highlights
பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய 'குற்றப்பரம்பரை'  என்னும் நாவலை, படமாக்க, தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் இயக்குனர் பாரதி ராஜா மற்றும் பாலா ஆகிய இருவருக்கும் இடையே பணி போர் ஏற்பட்டது அனைவரும் அறிந்தது தான்.
 
பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய 'குற்றப்பரம்பரை'  என்னும் நாவலை, படமாக்க, தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் இயக்குனர் பாரதி ராஜா மற்றும் பாலா ஆகிய இருவருக்கும் இடையே பணி போர் ஏற்பட்டது அனைவரும் அறிந்தது தான்.

இந்த பிரச்சனை கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன் விஸ்வரூபம் எடுத்ததால், இருவரும் நேரடியாகவே விமர்சித்து கொண்டனர். பின் இது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்த பின்பே இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.



இந்த பிரச்சனைக்கு பின்,  இருவருமே 'குற்றப்பரம்பரை' நாவலை படமாக எடுக்காமல் அமைதி காத்து வருகின்றனர்.

அதே சமயம் இயக்குனர் பாரதிராஜா, குற்றபரம்பரை கதையை சீரியலாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும்,  அது குறித்த பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இவர்களுக்கு போட்டியாக தற்போது 'குற்றப்பரம்பரை' நாவலை இயக்குனர் அறிவழகன் படித்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். 


இதுகுறித்து அவர் போட்டுள்ள ட்விட்டில்,  இந்த ஊரடங்கு உத்தரவு நேரத்தில் படிப்பதற்கான சரியான நாவல் இதுதான் என்றும், பல படங்களை இயக்கிய அனுபவத்தை விட ஒரு நல்ல நாவலை படிப்பதால் கிடைக்கும் அனுபவம் மிகச் சிறந்தது என  கூறியுள்ளார்.

ஆனால் குற்ற பரம்பரை படத்தை அவர் திரைப்படமாக எடுப்பேன் என கூறவில்லை என்றாலும், இதனை படித்து முடித்த பின் அவருக்கும் படம் எடுக்கவேண்டும் என்பது போன்ற ஏதாவது எண்ணங்கள் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


தற்போது இயக்குனர் அறிவழகன் அருண் விஜய் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார் இது குறித்த பணிகள் துரிதமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

What I’m now, coz I hope Books shaped up me more than Movies. In the lock down period too, despite Script Writing and Watching Movies , Books doing its major part :) pic.twitter.com/4ECUnDETcl

— Arivazhagan (@dirarivazhagan)
click me!