கோலிவுட் திரையுலகை சுழட்டி அடிக்கு கொரோனா! சூர்யா - தனுஷ் பட தயாரிப்பாளர் மரணம்!

Published : May 11, 2021, 10:30 AM IST
கோலிவுட் திரையுலகை சுழட்டி அடிக்கு கொரோனா! சூர்யா - தனுஷ் பட தயாரிப்பாளர் மரணம்!

சுருக்கம்

 பிரபல நடிகர்கள் தனுஷ், சூர்யா ஆகியோரின் படங்களை தயாரித்த சேலம் சந்திர சேகர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

இந்தியாவையே அலைக்கழித்து வரும் கொரோனா 2வது அலைக்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த முறை எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட திரையுலக ஜாம்பாவன்கள் கொரோனா தொற்றுக்கு பலியாகினர். அதேபோல் இந்த முறையும் தமிழில் தலைசிறந்த கேமராமேனாகவும், வெற்றிப் பட இயக்குநராகவும் வலம் வந்த கே.வி.ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்கு பலியானார். 

மேலும் செய்திகள்: ‘ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு’... வெங்கட் பிரபுவின் தாயார் மறைவிற்கு கண்ணீருடன் இரங்கல் தெரிவித்த சிம்பு...!
 

கடந்த வாரம், தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகரும், அதிமுக கொடியை வடிவமைத்தவருமான நடிகர் பாண்டு கொரோனா தொற்றால் மரணமடைந்தார். அன்றைய தினமே ஆட்டோகிராப் படத்தில் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலில் நடித்த கோமகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இந்நிலையில் பிரபல நடிகர்கள் தனுஷ், சூர்யா ஆகியோரின் படங்களை தயாரித்த சேலம் சந்திர சேகர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

மேலும் செய்திகள்: பச்சை கலர் லிப்ஸ்டிக் ரொம்ப கொடுமையா இருக்கு... கெத்தாக ஆட்டம் போட்ட வனிதாவை வச்சு செய்த நெட்டிசன்கள் !
 

தயாரிப்பாளர் சேலம் சந்திர சேகர், சூர்யா நடித்த கஜினி, தனுஷ் நடித்த சுள்ளான்,சபரி, கில்லாடி ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.. இவரது மறைவிற்கு, திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மேலும் கோலிவுட் திரையுலகை சுழட்டி அடிக்கும் கொரோனா தொற்றால் பலர் உயிரிழந்து வருவது பிரபலங்களை வேதனையடைய செய்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!
கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்