வாயடைத்து போக வைக்கும் தனுஷின் பர்ஃபாமென்ஸ்... பிரபலம் வெளியிட்ட 'நானே வருவேன்' முதல் விமர்சனம் இதோ..!

Published : Sep 28, 2022, 03:57 PM IST
வாயடைத்து போக வைக்கும் தனுஷின் பர்ஃபாமென்ஸ்... பிரபலம் வெளியிட்ட 'நானே வருவேன்' முதல் விமர்சனம் இதோ..!

சுருக்கம்

நடிகர் தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள, 'நானே வருவேன்' திரைப்படம் எப்படி இருக்கிறது என பிரபல சினிமா விமர்சகரும்,  வெளிநாட்டு சென்சார் போர்டை சேர்ந்தவருமான உமர் சந்து தெரிவித்துள்ளார்.  

'திருச்சிற்றம்பலம்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர், தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ளார். தனுஷ் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: பியூட்டி பார்லர் தோழியுடன் டூர் அடிக்கும் மீனா..! விதவிதமான உடையில் வேற லெவல் கொண்டாட்ட வீடியோ..!
 

'நானே வருவேன்' படத்தை பார்த்த வெளிநாட்டு சென்சார் போர்டை சேர்ந்த உமர் சந்து தான் வழக்கம் போல், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், 'நானே வருவேன்' திரைப்படம் எப்படி இருக்கிறது?  முதல் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, "நானே வருவேன் திரைப்படம் 2022 ஆம் வருடத்தின் மிக சிறந்த திரில்லர்களில் ஒன்று! அனைவரையும் ஈர்க்கும் கதை & திரைக்கதை! தனுஷ் தன்னுடைய நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளையடிப்பார். செல்வராகவனின் ஆச்சர்யமான க்ளைமாக்ஸ் உங்கள் மனதை வருடும்" என கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்: 71 வயது நடிகருக்கு ஜோடியாகிறாரா ஜோதிகா..? ஜோதிகாவின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்..!
 

மேலும், தனுஷ் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை வாயடைக்க செய்து விட்டார். 2022 அவருக்கான வருடம் என படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளார். தனுஷ் இந்தியாவில் உள்ள மிக சிறந்த நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பான 'பொன்னியின் செல்வன்' படத்துடன் இந்த படம் மோதுகிறது. கதை மீது கொண்ட நம்பிக்கை காரணமாக, பின்வாங்கி செல்லாமல் இந்த படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் முதல் விமர்சனமே பாசிட்டிவாக வந்துள்ளதாலும், தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதாலும் பாக்ஸ் ஆபிசில் 'நானே வருவேன்' கண்டிப்பாக கெத்து காட்டும் என கூறப்படுகிறது. 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?