
கடந்த வருடம் நடிகர் சங்க தேர்தலில் விடா பிடியாக போராடி வெற்றி கண்டது விஷாலின் அணி. இதை தொடர்ந்து தற்போது நடிகர் சங்கத்தில் பல பிரச்சனைகள் போய் கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் 2 வருடத்துக்கு ஒரு முறை நடத்தப்பம் தேர்தல் நடைபெறஉள்ளது.
2015ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக எஸ். தாணு, செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று இரவு சென்னையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் பிப்ரவரி 5ம் தேதி தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்துவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில், பல பிரச்சனைகளை எடுத்து காட்டிவரும் விஷால்.
புது அணியோடு, தான் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் களம் இறங்க உள்ளதாக அறிவித்திருந்தார்.
இதனால் பிப்ரவரி மாதம் நடக்க உள்ள தயாரிப்பாளர் தேர்தலிலும் விஷால் தலைவர் பதவிக்கு போட்டி இடுவார் என கூறப்படுகிறது. இந்த முறை தாணுவை வீழ்த்துவாரா விஷால் பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.