
இயக்குனர் பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய் இரண்டாவது முறையாக நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படம் விஜய் ரசிகர்களுக்காக பொங்கல் தினத்தில் ரிலீஸ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 23ஆம் தேதி ரிலீஸ் ஆக வேண்டிய சூர்யாவின் 'எஸ் 3' திரைப்படமும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் கடந்த 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் விஜய், சூர்யா படங்கள் மீண்டும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகின்றது மட்டுமின்றி இயக்குனர்கள் பரதன் மற்றும் ஹரி இயக்கிய படங்களும் மீண்டும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகின்றது.
விஜய் நடிப்பில் பரதன் இயக்கிய 'அழகிய தமிழ்மகன்' படமும் ஹரி இயக்கிய 'வேல்' திரைப்படமும் கடந்த 2007ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன நிலையில் தற்போது ஒன்பது வருடங்கள் கழித்து அதே பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த 'பைரவா' படமும், ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த 'எஸ் 3' படமும் ரிலீஸ் ஆவது ஆச்சரியமான ஒன்றாக கோலிவுட்டில் கருதப்படுகிறது.
கடந்த முறை ஹரி-சூர்யா கூட்டணியின் 'வேல்' வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை வெற்றி பெறப்போவது யார்? என்பதை அறிய விஜய், சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஆனாலும் இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இரண்டுமே வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.