விசாரணை ஆஸ்கர் போட்டியில் இடம் பெறாதது ஏன் தெரியுமா.....!!!

First Published Dec 16, 2016, 4:15 PM IST
Highlights


ஆஸ்கர்  விருது, எனப் பரவலாக அறியப்படும் அகாடமி  விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். 

திரை துறையில் பணியாற்றும்,சிறந்த கலைகர்களுக்கு இந்த விருது வருடா வருடம் 24 கலை நுட்பத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

2016 ஆம் ஆண்டின் சிறந்த வெளிநாட்டு படம் என்கிற அடிப்படையில்,விசாரணை  தேர்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் விருது போட்டிக்கி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த படத்தை பார்வையிடும் கலைஞர்களுக்காகவும்,பிரபலன்களுக்காகவும் பிரத்தேயகமாக ஒரு நிறுவனத்தின் மூலம் 6கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

படங்களை பார்க்கும் பிரபலங்கள், விமர்சகர்கள் தங்களுடைய கருத்தை ஓட்டு மூலம் பதிவு செய்ய செய்ய வேண்டும்.

அப்படி பதிவு செய்ய பட்ட ஓட்டுகளின் அடிப்படையில் அதிக ஓட்டுகள் பெற்று , டாப் 10 படங்கள் மட்டுமே ஆஸ்கர் விருது போட்டியில் இடம் பெரும்.

விசாரணை படத்திற்கு அதிக ஓட்டுகள் கிடைக்காததால் மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியை இழந்தது.

ஆனால் விசாரணை படத்தை பார்த்த பலரும் இயக்குனர் வெற்றி மாறனை வெகுவாக பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!