‘அன்புச்சகோதரர் அஜித்திற்கு வாழ்த்துக்கள்’... தங்கம் வென்ற தல-க்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ்., வாழ்த்து...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 08, 2021, 06:50 PM IST
‘அன்புச்சகோதரர் அஜித்திற்கு வாழ்த்துக்கள்’... தங்கம் வென்ற தல-க்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ்., வாழ்த்து...!

சுருக்கம்

தோட்டாக்களை தெறிக்கவிட்டு தங்கம் வென்ற தல அஜித்திற்கு திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர். 

திரையுலகையும் கடந்து கார் மற்றும் பைக் ரேஸ், எம்.ஐ.டி யில் விமானம் ஓட்டும் பயிற்சிக்கான வகுப்பில் சிறப்பு அட்வைஸர் என பல்வேறு திறமைகளை கொண்டுள்ள தல அஜித், இந்த ஆண்டு நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று கெத்து காட்டியுள்ளார். கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தல அஜித் கலந்துகொண்டு டாப் 10 இடங்களுக்குள் வந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான். 

கடந்த சில நாட்களாகவே தல அஜித் சென்னையில்  ரைபிள் பயிற்சி அகாடமியில் துப்பாக்கியும் கையுமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தன. இந்நிலையில், தமிழ்நாடு 46-வது துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள, ஒரு வாரமாக தீவிர பயிற்சி எடுத்து வந்த அஜித், 3 தங்க பதக்கம் உட்பட 4 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளார். 

தோட்டாக்களை தெறிக்கவிட்டு தங்கம் வென்ற தல அஜித்திற்கு திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்!” என வாழ்த்து கூறியுள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!