அஜித் இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடல்..! முன்னணி இயக்குனர் பாராட்டு!

By manimegalai aFirst Published Mar 8, 2021, 4:52 PM IST
Highlights

தல அஜித் 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 3 தங்கப்பதக்கம் உட்பட 4 வெள்ளிப் பதக்கங்களை வென்றதை தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பிரபல இயக்குனர் சேரன் அஜித்துக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அஜித் இளைஞர்களின் ரோல்மாடல் என புகழாரம் சூட்டியுள்ளார்.
 

தல அஜித் 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 3 தங்கப்பதக்கம் உட்பட 4 வெள்ளிப் பதக்கங்களை வென்றதை தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பிரபல இயக்குனர் சேரன் அஜித்துக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அஜித் இளைஞர்களின் ரோல்மாடல் என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் கேப்ரில்லாவா இது? ஹீரோயின்களுக்கு நிகராக தினுசு தினுசா போஸ் கொடுத்து அசத்துறாங்களே..!
 

கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தல அஜித் கலந்துகொண்டு டாப் 10 இடங்களுக்குள் வந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான். இதை தொடர்ந்து, தமிழ்நாடு 46-வது துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள, ஒரு வாரமாக தீவிர பயிற்சி எடுத்து வந்த அஜித், 3 தங்க பதக்கம் உட்பட 4 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.

மேலும் செய்திகள்: பெண்கள் இருக்கும் இடத்தில் மேஜிக் உள்ளது... ரகுல் ப்ரீத் சிங்கின் அழகிய பெண்கள் தின வாழ்த்து..!
 

இந்த செய்தியை உறுதி படுத்தும் விதமாக, நேற்று சமூகவலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி மிகவும் வைரலானது. அஜித்தின் 'வலிமை' பட அப்டேட்  கேட்ட ரசிகர்களுக்கு இந்த செய்தி அதைவிட மிகப் பெரிய சந்தோசத்தை கொடுத்தது. இந்நிலையில் அஜித்திற்கு தொடர்ந்து பல பிரபலங்கள், சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தேசிய விருது இயக்குனரும், பிக்பாஸ் பிரபலமான சேரன், தனது ட்விட்டர் பக்கத்தில்... தமிழ்நாடு வரையிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார்.. எம்.ஐ.டி யில் விமானம் ஓட்டும் பயிற்சிக்கான வகுப்பில் சிறப்பு அட்வைஸர்.... சினிமாவில் நடிகனாக மட்டுமில்லாமல் தனது மற்ற திறமைகளை வெளிக்கொணரும் அஜித் சார் பாராட்டுக்குரிய ஒரு Role model.. இளைஞர்களுக்கு. என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழ்நாடு வரையிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார்.. எம்.ஐ.டி யில் விமானம் ஓட்டும் பயிற்சிக்கான வகுப்பில் சிறப்பு அட்வைஸர்.... சினிமாவில் நடிகனாக மட்டுமில்லாமல் தனது மற்ற திறமைகளை வெளிக்கொணரும் அஜித் சார் பாராட்டுக்குரிய ஒரு Role model.. இளைஞர்களுக்கு. pic.twitter.com/STTxGQBZC7

— Cheran (@directorcheran)

 

click me!