தன் புதிய படத்தில் பாடகராகவும் அசத்திய நடிகர் நகுல் !

Published : Mar 08, 2021, 06:26 PM IST
தன் புதிய படத்தில் பாடகராகவும் அசத்திய நடிகர் நகுல் !

சுருக்கம்

தமிழ் சினிமாவின், இளம் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் நகுல் தற்போது வெற்றி படத்தை கொடுக்க போராடி வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாகவே இவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இவர் நடிக்க உள்ள படத்தில், நடிப்பை தாண்டி பாடலிலும் கலக்கியுள்ளார்.  

நகுல் ஏற்கனவே விக்ரம் நடிப்பில் வெளியான 'அந்நியன், சூர்யா நடித்த  'கஜினி, கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு, சிம்புவின் 'வல்லவன் போன்ற பல திரைப்படங்களில் பாடியுள்ளார். நடிப்பில் கவனம் செலுத்த துவங்கிய பின்னரும் இவர் நடிக்கும் படங்களில் சில பாடல்களை பாடி வந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். ப்ரிஸ்லி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பெயரிடப்படாத படத்தில்  நடிகர் நகுல் நடித்து வருகிறார்.  அறிமுக இயக்குனர் சதுஷன் இப்படத்தை  இயக்குகிறார்.  அஷ்வத் இப்படத்தின் இசையமைத்து வருகிறார். 

நடிகர் நகுல் ஏற்கனவே இசையில் ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்தது தான். தன்னுடைய ரசிகர்கள் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பாடச் சொல்லி கேட்டுகொண்டதிற்கு இணங்க அவர், இப்பாடலை பாடியுள்ளார். இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!