ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவு !! தீபிகாவின் விளம்பர படங்களுக்கு ஆப்பு !!

By Selvanayagam PFirst Published Jan 14, 2020, 10:20 AM IST
Highlights

CAA  - வுக்கு எதிராக போராடி வரும் ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவளித்த பிரபல இந்தி நடிகை தீபிகா நடித்த விளம்பரப்படங்கள் ஒளிபரப்புவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் தீபிகாவை வைத்து எடுக்கப்பட்ட மத்திய அரசின் விளம்பரப்படமும் கைவிடப்பட்டுள்ளது.

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜேஎன்யு மாணவர்களை தீபிகா படுகோன் சந்தித்து ஆதரவு அளித்தது தற்போது பெரும் பிரச்சனையாகியுள்ளது. 

முதலில் அவர் நடித்து கடந்த வாரம் வெளியான  சப்பாக் படத்தை புறக்கணிக்க வேண்டும்  என பாஜக பிரச்சாரம் செய்தது. இதனால் அந்தப் படம்  எதிர்பார்த்ததைவிட குறைந்த வசூலைப் பெற்றது . ஆனாலும்  அவர் மனம் தளரவில்லை. அதே நேரத்தில் அவர் நடித்துள்ள விளம்பரம் படங்கள் ஒளிபரப்புவ பெரிய நிறுவனங்கள் குறைத்துக் கொண்டன.

இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பொருட்களுக்கு பிராண்டு அம்பாசிடராக இருந்து வருகிறார்  . தீபிகா நடித்த பல்வேறு விளம்பரங்கள் ஒரே நாளில் 11 மணிநேரத்துக்கும் மேலாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு சாதனை படைத்தன. ஆனால், தற்போது இல்லாமல் போனது..

ட்விட்டர் வாழ் நெட்டிசன்ஸ் சிலர், ‘தீபிகா இடம்பெறும் விளம்பரங்களின் பிராண்டுகளைப் புறக்கணிப்போம்’ என்று ஒரு பரப்புரையைத் தொடங்கினர். இதனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பித்துவிடுவதற்காக, சில விளம்பர நிறுவனங்கள் அடுத்த சில வாரங்களுக்கு எந்த விளம்பரப் படத்தையும் ஒளிபரப்ப வேண்டாம் என்று முடிவெடுத்து, விளம்பர ஒப்பந்தங்களை மாற்றி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதே போல் தீபிகா படுகோன் நடித்துக் கொடுத்துள்ள மத்திய அரசின் ஒரு விளம்பரப் படம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.  ஜேஎன்யூ மாணவர்களை சந்தித்தால் இப்படிப்பட்ட  பல பிரச்சனைகளை தீபிகா சந்தித்து வருகிறார்.

click me!