கவர்ச்சிக் களத்தில்  திருட்டுப் பயலே 2..! அமலா பாலுக்கு போட்டியாக அறிமுக நடிகை நயனா..!

 
Published : Nov 28, 2017, 05:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
கவர்ச்சிக் களத்தில்  திருட்டுப் பயலே 2..! அமலா பாலுக்கு போட்டியாக அறிமுக நடிகை நயனா..!

சுருக்கம்

Debut actress Nayana competition for Amala Paul

ஏஜிஎஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட், கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் திருட்டுப் பயலே... படத்தின் இரண்டாவது பாகமாக இயக்கியுள்ள திரைப்படம் திருட்டுபயலே 2. 

இந்தப் படத்தில் கதாநாயகர்களாக  பாபி சிம்ஹா மற்றும் பிரசன்னா நடித்துள்ளனர். கதாநாயகியாக நடிகை அமலபால் படு கவர்ச்சியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.  

ஏற்கெனவே இப்படத்தின் முன்னோட்டமும், பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில்  ‘திருட்டுப்பயலே 2’ படத்திற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலாய் காத்திருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் விதமாக இயக்குநர் சுசிகணேசன் திருட்டுப்பயலே 2 படத்தில் நயனா எனும் புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தியுள்ளார். 

நயனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் இந்தப் படத்தில் அமலா பாலுக்கு போட்டியாக கவர்ச்சி காட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் உலகமெங்கும் திருட்டுப்பயலே 2 திரைப்படம் நவம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?