சைகோ திரில்லராக உருவாகியுள்ள "உத்தரவு மகாராஜா"

 
Published : Nov 28, 2017, 04:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
சைகோ திரில்லராக உருவாகியுள்ள "உத்தரவு மகாராஜா"

சுருக்கம்

utharavu maharaja is the saiko thriller

இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய கதைக் களத்தில் மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி இருக்கிறது, “இளைய திலகம்” பிரபுவோடு உதயா இணைத்து நடித்துள்ள திரைப்படம்“உத்தரவு மகாராஜா”.


“உத்தரவு மகாராஜா”படத்தின் சிறப்பம்சம் திரைக்கதையில் ஒரு புதிய முயற்சியை இயக்குநர் கையாண்டிருக்கிறார். மற்ற திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை, ஆக்ஷன் கலந்த சைக்கோ த்ரில்லர் கதை இது. 

இயக்குனராக ஆஸிப் குரைஷி அறிமுகமாகிறார். இவர் தமிழ் இந்தி மற்றும் பெங்காலி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.  இப்படத்தில் பிரியங்கா, சேரா, நிஷா என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். 

இப்படத்தில் நாசர், கோவைசரளா, ஸ்ரீமன், மனோபாலா, MS பாஸ்கர், சரவணன், தனஞ்செயன், தளபதி தினேஷ், சோனியா போஸ், பிரேம் மற்றும் பல நட்சத்திரங்களுடன் நீண்ட இடை வெளிக்குப் பின் குட்டிபத்மினி நடிக்க இருக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் முதற்கொண்டு பெரும்பாலான முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?