மங்களநாத குருக்கள் குடும்பத்தோடு மரணம்..? வதந்தியை பரப்பியதோடு... மர்ம நபர்கள் செய்த அதிர்ச்சி செயல்!

Published : Jun 02, 2021, 05:22 PM IST
மங்களநாத குருக்கள் குடும்பத்தோடு மரணம்..? வதந்தியை பரப்பியதோடு... மர்ம நபர்கள் செய்த அதிர்ச்சி செயல்!

சுருக்கம்

தமிழ் சினிமா, மற்றும் சீரியல்களில், திருமணம் மற்றும் கோவில் பூசாரியாகவும் நடித்து பிரபலமானவர் மங்களநாத குருக்கள். இவர் இறந்துவிட்டதாக கூறி, மர்ம நபர்கள் சமூக வலைத்தளங்களில் பணம் வசூல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழ் சினிமா, மற்றும் சீரியல்களில், திருமணம் மற்றும் கோவில் பூசாரியாகவும் நடித்து பிரபலமானவர் மங்களநாத குருக்கள். இவர் இறந்துவிட்டதாக கூறி, மர்ம நபர்கள் சமூக வலைத்தளங்களில் பணம் வசூல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அலை தலை தூக்கியத்தில் இருந்து, ஓவொரு நாளும் பலரும் உயிர் பயத்துடன் வாழ வேண்டிய சூழ் நிலை உருவாகியுள்ளது. மேலும் ஆரோக்கியமாக இருந்த நடிகர்கள் கூட, கொரோனா காரணமாக, உயிரிழந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது ஒரு பக்கம் என்றால், மற்றொரு புறம் உடல்நல பிரச்சனைகள் மற்றும் மாரடைப்பு காரணமாகவும் சில பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பல திரைப்படங்கள், மற்றும் சீரியல்களில் நடித்துள்ள மங்களநாத குருக்கள் குடும்பத்தோடு இறந்து விட்டதாக, மர்ம நபர்கள் வதந்திகளை கிளப்பி விட்டது மட்டும் இன்றி, இவர்களது உடலை தகனம் செய்ய பணம் இல்லை என்று கூறி பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து, தெரிந்தவர்கள் மூலம் மங்களநாத குருக்களுக்கு தெரிய வரவே, இது குறித்து மயிலாப்பூர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நாம் மற்றும் என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், ஆனால் தான் இறந்துவிட்டதாக பொய்யான தகவலை பரப்பி மர்ம நபர்கள் சிலர் பணம் வசூல் செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது, எனவே அவர்கள் யார் என்று கண்டு பிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் சமூக வலைத்தளத்தில் பரவி வரும்  அந்த பொய்யான பதிவை நீக்க வேண்டும் என்றும் தன்னுடைய புகார் மனுவில் கூறியுள்ளார்.

மங்களநாத குருக்கள் பிரபலமானவர் என்பதால், அவர் இறந்து விட்ட செய்தி அறிந்தும், தகனம் செய்யக்கூட பணம் இல்லை என்ற வதந்தியை நம்பி, பலர் பணம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரபல நடிகர்கள் பற்றி வதந்தி பரவுவது அவ்வப்போது நடக்கும் விஷயம் தான். அவர்களும் இது போன்ற வதந்திக்கு உடனடியாக பதில் கொடுப்பார்கள். ஆனால் துணை நடிகர் ஒருவர் பற்றி இப்படி ஒரு வதந்தி பரவியுள்ளது பரபரப்பாகி உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Netflix Pandigai : 2026-ல் ஒரு டஜன் தமிழ் படங்களை வாங்கிக் குவித்த நெட்பிளிக்ஸ்... என்னென்ன படங்கள் தெரியுமா?
கிரேட் எஸ்கேப்... ராஜா சாப் படத்தின் பர்ஸ்ட் சாய்ஸ் ‘இந்த’ தமிழ் நடிகரா? - நல்ல வேளை அவர் நடிக்கல..!