கோலிவுட் திரையுலகை அச்சுறுத்தும் அடுத்தடுத்த மரணங்கள்... பிரபல தயாரிப்பாளர் உடல்நல குறைவால் காலமானார்!

Published : Jun 02, 2021, 01:22 PM IST
கோலிவுட் திரையுலகை அச்சுறுத்தும் அடுத்தடுத்த மரணங்கள்... பிரபல தயாரிப்பாளர் உடல்நல குறைவால் காலமானார்!

சுருக்கம்

திரையுலகை சேர்ந்த பலர் அடுத்தடுத்து, கொரோனா மற்றும் உடல்நல குறைவு காரணமாக, மரணமடையும் செய்திகள் கடந்த வருடத்தை விட இந்த வரும் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.   

திரையுலகை சேர்ந்த பலர் அடுத்தடுத்து, கொரோனா மற்றும் உடல்நல குறைவு காரணமாக, மரணமடையும் செய்திகள் கடந்த வருடத்தை விட இந்த வரும் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். 

தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர் ஜி.ஆர் ராமச்சந்திரன். 73 வயதாகும் இவர், சமீப காலமாகவே உடல் நலக்குறைவு காரணமாக அவதி பட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை இவர், காலமாகி விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் தமிழ், மற்றும் கன்னட திரையுலகை சேர்ந்த பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பிரபலங்கள் சமுக வலைத்தளம் மூலமாக இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தயாரிப்பாளர் ஜி.ஆர். தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படங்களை தயாரித்துள்ளார். குறிப்பாக நாட்டுப்புற பாட்டு, எட்டுபட்டி ராசா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.  ’மனுநீதி’ ’சவுண்ட் பார்ட்டி’ ’எங்க ராசி நல்ல ராசி’ போன்ற தமிழ் படங்களையும் சில கன்னட திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். 

கொரோனா, மாரடைப்பு, உடல்நல குறைவு காரணமாக அடுத்தடுத்து முக்கிய திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம் அடைவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிபிடித்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Netflix Pandigai : 2026-ல் ஒரு டஜன் தமிழ் படங்களை வாங்கிக் குவித்த நெட்பிளிக்ஸ்... என்னென்ன படங்கள் தெரியுமா?
கிரேட் எஸ்கேப்... ராஜா சாப் படத்தின் பர்ஸ்ட் சாய்ஸ் ‘இந்த’ தமிழ் நடிகரா? - நல்ல வேளை அவர் நடிக்கல..!