கொரோனா நிவாரண உதவியாக ரூ.1 கோடிக்கு மேல்... கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்!

Published : Jun 02, 2021, 11:54 AM ISTUpdated : Jun 02, 2021, 11:55 AM IST
கொரோனா நிவாரண உதவியாக ரூ.1 கோடிக்கு மேல்...  கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்!

சுருக்கம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல பிரபலங்கள், தொழிலதிபர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் அடுத்தடுத்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, பிரபல தயாரிப்பாளரும் வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் ஐசரி கணேஷ் ரூ.1 கோடிக்கு மேல் நிதிஉதவி அளித்துள்ளார்.  

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல பிரபலங்கள், தொழிலதிபர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் அடுத்தடுத்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, பிரபல தயாரிப்பாளரும் வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் ஐசரி கணேஷ் ரூ.1 கோடிக்கு மேல் நிதிஉதவி அளித்துள்ளார்.

தமிழகத்தை கொரோனா இல்லாதா மாநிலமாக  மாற்ற மாநில அரசும், சுகாதார துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக முழு ஊரடங்கு பிறப்பிக்க பட்டத்தின் பலனாக ஒவ்வொரு நாளும் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்க பட்டு வந்த நிலையில், தற்போது 25 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்னும் சில வாரங்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் தான் கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வரும் என கூறப்படுவதால், மேலும் சில வாரங்களுக்கு ஊரடங்கு அமல் படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் முதல்வர் ஸ்டாலின், கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்கும், மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், பெட், ஆச்சிஜன் செறிவூட்டிகள், மற்றும் தடுப்பூசி போன்றவற்றின் தேவைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, தாராளமாக நிதி கொடுத்து உதவ வேண்டும் என்கிற அறிக்கை வெளியிட்ட பின், அடுத்தடுத்து பலர் தங்களால் முடிந்த உதவிகளை ஆன் லைன் பரிவர்த்தனை மூலமாகவும், நேரடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தும் காலாசாலைகளை வழங்கி வந்தனர்.

அந்த வகையில் தற்போது, பிரபல தயாரிப்பாளரும் வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் ஐசரி கணேஷ் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார். அப்போது அவருடன் அவருடைய மனைவி ஆர்த்தி மற்றும் மகள் ப்ரீத்தா ஆகியோர் இருந்தனர். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எந்தவித ஆரவாரமும் இல்லாமல் திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டாப் 3 சிறந்த படங்கள்!
இவ்வளவு நடந்தும் இன்னும் டிராமாவா: நான் மருமகள் தானே மன்னிக்க கூடாதா: கதறிய தங்கமயில்!