தந்தையின் உடலை அனைத்து அப்பா எழுந்துருங்க என்று கதறிய நைனிகா.. உடைந்து நின்ற மீனா..

By Ezhilarasan Babu  |  First Published Jun 30, 2022, 1:16 PM IST

மீனாவின் கணவர் வித்யாசாகரின் இறுதி நிகழ்ச்சியின்போது அவர்களது மகள் நைனிகா அப்பா எழுந்திரிங்க என கதறியது காட்சி அருகில் இருந்தவர்களை கண்கலங்க வைத்தது. அங்கிருந்த பலரும் இதை பார்த்து கதறி அழுதனர். அருகிலிருந்த மீனா உடைந்து நின்றார். அந்த காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது.
 


மீனாவின் கணவர் வித்யாசாகரின் இறுதி நிகழ்ச்சியின்போது அவர்களது மகள் நைனிகா அப்பா எழுந்திரிங்க என கதறியது காட்சி அருகில் இருந்தவர்களை கண்கலங்க வைத்தது. அங்கிருந்த பலரும் இதை பார்த்து கதறி அழுதனர். அருகிலிருந்த மீனா உடைந்து நின்றார். அந்த காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது. 

நுரையீரல் தொற்று காரணமாக பிரபல நடிகை மீனாவின் கணவர் நேற்று முன்தினம் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் மரணச் செய்தி ஒட்டுமொத்த திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்தது. தமிழகம் கர்நாடகா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மீனாவின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சிவாஜி கணேசன், நடிகர் ரஜினிகாந்த் என பல உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து பின்னர் 1990களில் தமிழ் சினிமாவின் உச்ச கதாநாயகியாக வலம் வந்தார் மீனா.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: முதலிரவு ரூமுக்குள் நுழைந்த உடனே மிருகத்தனமாக பாலியல் தொல்லை.. அலறியபடி மயங்கி விழுந்த மணம்பெண்..!

ராஜ்கிரனுடன் நடித்த என் ராசாவின் மனசிலே படம் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ரஜினியுடன் எஜமான், முத்து, வீரா, அண்ணாத்த ஆகிய பல படங்களுடன் நடித்தார். கமல் உடனும் பல படங்களில் நடித்துள்ளார், விஜய் யுடன் நடிக்கவில்லை என்றாலும் ஷாஜகான் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் மீனா. இந்நிலையில் 2009ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த மின்பொறியாளர் வித்யாசாகர் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார், இத்தம்பதியருக்கு நைனிகா என்ற மகன் உள்ளார். 2016 இல் விஜய் நடித்த தெறி படத்தில் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மீனாவின் குடும்ப வாழ்க்கையை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் சென்று கொண்டிருந்தது.

இதையும் படியுங்கள்:  நரிக்குறவர் வீட்டிற்கு சென்றதால் நான் விளம்பர பிரியனா? எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்

ஆனால் திடீரென அவரது கணவருக்கு ஏற்பட்ட நுரையீரல் தொற்று காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். வித்யாசாகருக்கு 48 வயது ஆகும். மீனாவின் கணவர் மறைவு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மீனா கோட்டூர்புரம் பகுதியில் ஸ்ரீநகர் காலனி அவன்யூவில் வசித்து வருகிறார். இந்நிலையில் வித்யாசாகர் உடலுக்கு ஏராளமான திரை நட்சத்திரங்கள் பொதுமக்கள் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. அப்போது நடிகை மீனா அவருக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்தார்.

அப்போது அவரின் மகள் நைனிகா தந்தையின் உடலை கட்டிப்பிடித்து அப்பா எழுந்திருங்க அப்பா என்று கதறிய காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. பலர் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதனர். இது குறித்து தெரிவித்த அப்பகுதி மக்கள், எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பார் வித்யாசாகர், மீனாவும் அதேபோன்றுதான் எந்தவித பந்தாவும் காட்டமாட்டார்கள். எப்போது பார்த்தாலும் சிரித்துக் கொண்டே போவார்கள் வருவார்கள், இப்போது மீனா அழுவதைப் பார்க்க முடியவில்லை, 10 வயது குழந்தை நைனிகா தந்தை இல்லாததை எப்படி தாங்கிக் கொள்வார் என்பதை எண்ணிப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது என கூறியுள்ளனர். 
 

click me!