எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் நடிகை மீனா இப்போது கதறி அழுவதை பார்க்கவே முடியவில்லை என நடிகர் சரத்குமார் வேதனை தெரிவித்துள்ளார். மீனாவின் கணவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார் என்றும் அப்பகுதி மக்கள் உருக்கம் தெரிவித்துள்ளனர்.
எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் நடிகை மீனா இப்போது கதறி அழுவதை பார்க்கவே முடியவில்லை என நடிகர் சரத்குமார் வேதனை தெரிவித்துள்ளார். மீனாவின் கணவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார் என்றும் அப்பகுதி மக்கள் உருக்கம் தெரிவித்துள்ளனர்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளர் என பல படங்களில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா, பெயருக்கு ஏற்றார் போல் மீன் போல கண்ணழகு கொண்டவர் மீனா என அவரது ரசிகர்கள் பாராட்டுவது உண்டு. கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். வித்யாசாகர் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆவார், இவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு நைனிகா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. அம்மாவைப் போலவே நேனிகா விஜயின் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வித்யாசாகர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த தகவலை மீனாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அவரது ஒட்டுமொத்த குடும்பமும் அப்போது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது. வித்தியாசாகருக்கு கடுமையான நுரையீரல் தொற்று ஏற்பட்டு இருந்தது. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றிரவு அவர் உயிரிழந்தார். நுரையீரல் முழுவதுமாக செயல் இழந்து நிலையில் அவர் உயிரிழந்தார்.
ஒரு மாத காலமாக எக்மோர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது இந்நிலையில் அவரது உடலுக்கு அப்பகுதியிலுள்ள ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் நடிகைகள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மீனாவின் இல்லத்திற்கு நேரிடையாக சென்ற வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சரத்குமார் எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் மீனா இப்போது கண் கலங்கி அழுவதை காண வேதனையாக இருக்கிறது, மீனா எங்கள் குடும்ப நண்பர், அவர் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் எனக் கூறியுள்ளார்.
அதேபோல் அப்பகுதி மக்கள் மீனாவும் வித்யாசாகரும் மிகவும் தன்னடக்கமானவர்கள், பந்தா பகட்டு இல்லாதவர்கள், எப்போதும் வித்யாசாகர் சிரித்த முகத்துடன் இருப்பார், வணக்கம் வைத்தால் அவரும் வணக்கம் வைப்பார், குழந்தையை பள்ளிக்கூடம் கூட்டி செல்லும் போதும் வரும் போதும் நாங்கள் பார்த்தால் அவர் எங்களை பார்த்து சிரிப்பார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 10 வயது குழந்தை தந்தை இல்லாமல் எப்படி இருக்கும் என்பதை நினைத்தாலே கண் கலங்குகிறது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.