பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டான பிரபல டான்ஸ் மாஸ்டர்!

By Kanimozhi Pannerselvam  |  First Published Aug 31, 2021, 10:20 PM IST

இந்நிலையில் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடன இயக்குநரான சதீஷ் கமிட்டாகியுள்ளார். 


தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன்  திலீப்குமார் இயக்கத்தில்  'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 

Latest Videos

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்த நிலையில், ஈசிஆரை தொடர்ந்து சென்னையிலுள்ள கோகுலம் ஸ்டூடியோவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் படக்குழு இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்ல உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் எப்போது படக்குழு ரஷ்யா புறப்பட்டுச் செல்லும் என்ற தகவல் வெளியாகவில்லை. 

இடையில் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக படக்குழு வரும் செப்டம்பர் 1ம் தேதி டெல்லி புறப்பட உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

tags
click me!