கொரோனா பீதி... 31 ஆம் தேதி வரை திரையரங்கங்களை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர்!

By manimegalai aFirst Published Mar 15, 2020, 2:18 PM IST
Highlights

30 க்கும் மேற்பட்ட நாடுகளில் மெல்ல மெல்ல நுழைந்து, உலக மக்கள் பலரை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ்.  இந்தியாவில் தற்போது வரை 100 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தனிமை படுத்தி மருத்துவர்கள் அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கொடுத்து வருகிறார்கள்.  
 
அதிக அளவில் கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க, மத்திய, மற்றும் மாநில அரசிகள் பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறது. 

குறிப்பாக தமிழகத்தில், மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பல்வேறு இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: விருது விழா மேடையில் சுழன்று சுழன்று சிலம்பம் சுத்திய ஜோதிகா! வைரலாகும் வீடியோ!
 
மேலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும், மாணவர்களுக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  அதே போல் தமிழக எல்லையோர மாவட்ட திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை 31ஆம் தேதி வரை மூட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மேலும் செய்திகள்: தாராள கவர்ச்சி! தண்ணீரில் ஆட்டம் போட்ட காஜல் அகர்வால்! புகைப்பட தொகுப்பு!
 
இதன் மூலம், மக்கள் கூடுவதை தவிர்ப்பதோடு... கொரோனா பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
click me!