
Coolie Movie Overseas rights : நடிகர் ரஜினிகாந்தின் 171வது படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இவர்களுடன் பாலிவுட் நடிகர் அமீர்கானும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
கூலி திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் 2 மாதங்களே உள்ளதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட உள்ளன. அந்த வகையில் இந்த வாரம் கூலி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கூலி படத்துக்காக அனிருத் இசையில் டி ராஜேந்தர் பாடிய சிக்கிட்டு பாடல் தான் இந்த வாரம் வெளியாக உள்ளதாம். இதன் புரோமோ வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் உடன் டி ராஜேந்தர் மற்றும் அனிருத் ஆகியோரும் டான்ஸ் ஆடி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வார இறுதியில் இந்த பாடல் வெளியாக வாய்ப்பு உள்ளது.
கூலி படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸும் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில், அப்படத்தின் வெளிநாட்டு திரையரங்க ரிலீஸ் உரிமை பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், தற்போது கூலி படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸை 81 கோடிக்கு விற்பனை செய்து புதிய சாதனை படைத்திருக்கிறார்கள். இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை ஆனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் ஓவர்சீஸில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட படம் என்கிற சாதனையை கூலி படைத்துள்ளது. இதற்கு முன்னர் நடிகர் விஜய்யின் லியோ படம் 66 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது. அதற்கு அடுத்தபடியாக அண்மையில் வெளியான தக் லைஃப் படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் ரூ.63 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது. அவற்றையெல்லாம் ஓவர்டேக் செய்யும் விதமாக 81 கோடிக்கு ஓவர்சீஸ் ரைட்ஸை விற்பனை செய்து மாஸ் காட்டி உள்ளது கூலி படக்குழு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.