குக் வித் கோமாளி 4ஆவது சீசனிலிருந்து மணிமேகலை வெளியேறியதற்கான காரணம் இப்போது தான் புரிகிறது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
Content Queen என்று அழைக்கப்படும் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனிலிருந்து தற்போது வரையில் வித்தியாசமான கெட்டப்புகளில் வந்து அசத்தியுள்ளார். சோட்டாபீம் கெட்டப் ரசிகர்களை வியக்க வைத்தது. என்னை ஒரு ஆணாகவே மாற்றிவிடுங்கள் என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு வாரமும் வித விதமாக வித்தியாசம் வித்தியாசமான கெட்டப்புகளில் எல்லாம் வந்து அசத்தியிருப்பார்.
ஹீரோவை தொடர்ந்து ஹீரோயினையும் மாற்றிய பாலா... வணங்கான் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா?
ஷிவாங்கி கூட குக்காக மாறிய நிலையில், மணிமேகலை இன்னும் கோமாளியாகவே இருந்து வருகிறார். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், வீட்டில் சமையல் செய்கிறேன் என்ற பெயரில் குக்கரை வெடிக்கவும் வைத்திருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய சமையல் வித்தகராக இருக்கிறார் என்று நீங்களே புரிந்து கொள்ளங்கள். அதுமட்டுமா, சுடு தண்ணீரை காலில் கொட்டவும் செய்து குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கிறது. செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோருடன் இவர் செய்யும் லூட்டிகள் எத்தனை எத்தனையோ. இவருக்காகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களும் உண்டு.
குக் வித் கோமாளி மட்டுமின்றி சொந்த ஊரில் குட்டு வாண்டுகளுடன் சேர்ந்து கொண்டு இவர் அடிக்கும் அரட்டைகள், லூட்டிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. இதற்காகவே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இதெல்லாம் பண்ணுவது எதற்காக கன்டென்ட் பாஸ், கன்டென்ட். கடந்த வாரம் தனுஷின் நானே வருவேன் கெட்டப்பில் வந்த மணிமேகலை இது தான் தனது கடைசி எபிசோடு என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். கடந்த வாரம் நடந்த எபிசோடுக்கும் அவர் கலந்து கொள்ளவில்லை. என்ன காரணம் என்று கூட அவர் குறிப்பிடவில்லை. இந்த நிலையில் தான் அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
சொந்த ஊரில் புதிதாக இடம் வாங்கியிருந்த நிலையில், அந் த இடத்தில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் போட்டுள்ளனர். ஆம், ஹுசைன் மணிமேகலை நிலம் என்று சொல்லக் கூடிய பண்ணை வீட்டில் பாலக்கால் பூஜை நடத்தியுள்ளனர். கடின உழைப்பு மற்றும் கடவுள் அருளால் எங்களது குட்டி மாளிகையை உருவாக்குகிறோம். எப்போதெல்லாம் எங்களது கிராமத்திற்கு வருகிறோமோ அப்போதெல்லாம் எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான இடமாக இருக்கும். எப்போதும் போலவே எங்களை வாழ்த்துங்கள். கனவு காணுங்கள், அதனை செயல்படுத்தவும் செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார். பாலக்கால் பூஜை செய்யும் ஹூசைன் மணிமேகலையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.