'குக் வித் கோமாளி' பவித்ராவுக்கு அடித்த ஜாக்பாட்... பிரபல இளம் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கிறார்!

Published : Apr 28, 2021, 07:50 PM ISTUpdated : Apr 28, 2021, 07:54 PM IST
'குக் வித் கோமாளி' பவித்ராவுக்கு அடித்த ஜாக்பாட்...  பிரபல இளம் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கிறார்!

சுருக்கம்

காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில், ஹீரோயினாக நடிக்கும் இவர் அதை தொடர்ந்து மற்றொரு படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவி தொலைக்காட்சியில், சமையல் நிகழ்ச்சியை கூட இவ்வளவு சுவாரஸ்யமாக மாற்ற முடியுமா? என்கிற ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி. ஒவ்வொரு எபிசோடையும் கூடுதல் சுவாரஸ்யமாக்கும் அளவிற்கு, இந்த சமையல் போட்டி நடந்து முடிந்தது . பிக்பாஸ், சூப்பர் சிங்கர், கலக்க போவது யாரு, ஆகிய நிகழ்ச்சிகளை போல் இந்த நிகழ்ச்சிக்கும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது. கடந்த சீசனில் ரம்யாவை விட இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள, பவித்ரா ரசிகர்கள் மனதில் அதிகமாகவே இடம் பிடித்து விட்டார்.

அடிப்படையில் டான்சரான பவித்ரா லட்சுமி, விளம்பரங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு கிடைத்த, அறிமுகம் இவரை அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக மாற்றியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே, காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில், ஹீரோயினாக நடிக்கும் இவர், அதை தொடர்ந்து மற்றொரு படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

'பரியேறும் பெருமாள்' பட நடிகர் கதிருக்கு ஜோடியாக, 'குக் வித் கோமாளி' பவித்ரா ஜோடியாக நடிக்க உள்ளாராம். இந்த படத்தை அறிமுக இயக்குனர் இயக்க உள்ளதாகவும், காதல் படமாக இப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்த மற்ற சில தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பட வாய்ப்பு இல்லாமல், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின், தர்ஷா, பவித்ரா, புகழ், சிவாங்கி, பாலா, என பலர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடிக்க துவங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!