‘அது நான் கிடையாது’... குக் வித் கோமாளி பவித்ரா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 22, 2021, 08:39 PM IST
‘அது நான் கிடையாது’... குக் வித் கோமாளி பவித்ரா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ...!

சுருக்கம்

இப்படி குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமாக புகழ் பெற்ற பவித்ரா லட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

விஜய் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.  வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், நிஷா உள்ளிட்டோர் பங்கேற்ற “குக் வித் கோமாளி” முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து தற்போது சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா,  மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கலக்கி வருகின்றனர். 

கடந்த முறை ரம்யா பாண்டியனிடம் புகழ் செய்த குறும்புகள், சேட்டைகள் சிரிக்க வைத்ததோடு ரசிகர்களையும் கவர்ந்தது. அதேபோல் இந்த முறை புகழ் - பவித்ராவின் காம்பினேஷன் கலக்க வொர்க் அவுட் ஆகியுள்ளது. குழந்தை தனமான முகம், வெகுளியான புன்னகை, இனிமையான குரல் என பவித்ராவின் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை கொக்கி போட்டு இழுந்துள்ளது. 

 

இப்படி குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமாக புகழ் பெற்ற பவித்ரா லட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், "சில டிவிட்டர் பக்கங்கள் என்னுடையது போலவே ஆக்டிவாக இருக்கிறது. ட்விட்டரில் எனக்கு கணக்கு இருந்தாலும், நான் அதிக ஆக்டிவாக இல்லை. இன்ஸ்டாகிராமில் தான் நான் அதிக ஆக்டிவாக இருக்கிறேன். அதை ஒரு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் என் பெயரை கெடுக்க பார்க்கிறார்கள். 200% அதற்கு நான் பொறுப்பல்ல. இதுதான் என்னுடைய ஒரிஜினல் ட்விட்டர் பக்கம். உங்களுடைய அன்புக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Dhanush : பிரேக் அப் செய்து பிரிந்தார்களா தனுஷ் - மிருணாள் தாக்கூர்? காட்டுத்தீ போல் பரவும் தகவல்
Nooru Saami vs Engal Thangam Day 1 Box Office : சமந்தா vs விஜய் ஆண்டனி... முதல் நாள் வசூலில் வின்னர் யார்?