
சுசீந்திரன் - சிம்பு கூட்டணியில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் ரசிகர்களின் ஏகபோக வரவேற்பையும் தாண்டி, குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்பம், சென்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக வந்துள்ள இந்த திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்பு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
"ஈஸ்வரன்" படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, மனோஜ், கல்யாணி பிரியதர்ஷன், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், மோஷன் போஸ்டரும் வெளியாகி வைரலானது. தன்னுடைய ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக டுவிட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஆரம்பித்துள்ள சிம்பு, பட அப்டேட் முதல் லேட்டஸ்ட் லுக் வரை ஷேர் செய்து வருகிறார்.
தற்போது அம்மா உஷா, சிம்புவுக்கு உணவு ஊட்டி விடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிம்புவுக்கு அவருடைய அம்மா உஷா ராஜேந்தர் உணவு ஊட்டுகிறார். அப்போது அங்கிருக்கும் சிம்புவின் தங்கை இலக்கியாவின் மகன், ‘உனக்கு எதற்காக சாப்பாடு ஊட்டுகிறார்கள்’ என கேட்கிறார். அதற்கு சிம்புவோ, “உங்க அம்மா உனக்கு ஊட்டிவிடுற மாதிரி... எங்க அம்மா எனக்கு ஊட்டிவிடுறாங்க” என பதிலளிக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.