வீடு திரும்பினார் நடிகர் கமல்ஹாசன்... எத்தனை நாட்கள் ஓய்வெடுக்க உள்ளார் தெரியுமா?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 22, 2021, 04:14 PM ISTUpdated : Jan 22, 2021, 04:55 PM IST
வீடு திரும்பினார் நடிகர் கமல்ஹாசன்... எத்தனை நாட்கள் ஓய்வெடுக்க உள்ளார் தெரியுமா?

சுருக்கம்

நல்ல படியாக அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் இன்று வீடு திரும்பியுள்ளார். 10 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர். 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தன்னுடைய முதற்கட்ட தேர்தல் பரப்புரையையும், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக முடித்த கையோடு, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ​அதில், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தால் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்காக மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சிறிது காலம் ஓய்வில் இருக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

மேலும் மக்களை நேரில் சந்திக்க இயலாது எனும் மனக்குறையைத் தொழில் நுட்பத்தின் வாயிலாகப் போக்கிக்கொள்ளலாம். இந்த மருத்துவ விடுப்பில் உங்களோடு இணையம் வழியாகவும் வீடியோக்கள் வழியாகவும் பேசுவேன். மாற்றத்துக்கான நம் உரையாடல் இடையூறின்றி நிகழும். எண் மண்ணுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் சிறு துன்பம் என்றாலும் என் குரல் எங்கும் எப்போதும் எதிரொலித்தபடிதான் இருக்கும். இப்போதும் இது தொடரும் என்றும் நம்பிக்கை கொடுத்திருந்தார். 

இந்நிலையில் கடந்த 18ம் தேதி போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலுக்கு, மறுநாள் நல்ல படியாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. அன்றைய தினம் கமலின் மகள்களான ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் இருவரும் ஒன்றாக வெளியிட்டிருந்த கூட்டு அறிக்கையில், அப்பாவிற்கு நல்ல படியாக காலில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்ததாகவும், மருத்துவர்கள் குழு, மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தும் இருந்தனர். மேலும் நான்கைந்து நாட்களில் அப்பா வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர். 

 

இதையும் படிங்க: விஜே சித்ராவை கடித்து குதறிய ஹேமந்த்... அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாக நண்பர் ‘பகீர்’ வாக்குமூலம்...!

​நல்ல படியாக அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் இன்று வீடு திரும்பியுள்ளார். 10 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர். எனவே வீட்டில் இருந்த படியே கட்சி நிர்வாகிகளுடன் இணையம் வழியாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள கமல் ஹாசன், அதன் பின்னர் பிரச்சாரத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளாராம். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கழுத்தைபிடித்து வீட்டைவிட்டு துரத்தப்பட்ட தங்கமயில்-அதிர்ச்சியில் ஆடிப்போன பாக்கியம், மாணிக்கம்!
கார்த்திக்-ரேவதி உறவை முடிவுக்குக் கொண்டு வர... பஞ்சாயத்தைக் கூட்டிய சாமுண்டீஸ்வரி: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!