
தமிழ் சினிமாவில் சைக்கலாஜிகல் படங்கள் அரிது அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத புதுமையான திரைக்கதையில், சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமாக “பெண்டுலம்” படம் உருவாகிறது. அசுரன் படப்புகழ் அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும் இப்படத்தில் ஶ்ரீபதி, ஶ்ரீகுமார்,T.S.K, விஜித்,FIR ராம், ராம் ஜூனியர் எம் ஜி ஆர் , பிரேம் குமார், கஜராஜ், சாம்ஸ் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். முதல்முறையாக எட்டு கதாப்பாத்திரங்கள் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் புதுமையான திரைக்கதையில் ஒரு விறுவிறுப்பான திரில்லராக இப்படம் உருவாகிறது.
மேலும் செய்திகள்: ரவீந்தரை திருமணம் செய்துள்ள.. சீரியல் நடிகை மஹாலட்சுமி முதல் கணவர் யார்? விவாகரத்துக்கு என்ன காரணம் தெரியுமா?
20 ஆண்டுகளாக கேமரா பின்னணியிலும், ஒளிப்பதிவாளராக பல உலக விருதுகளை குவித்திட்ட குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணிபுரிந்திட்ட B.சதீஸ் குமரன் இப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் ஷங்கரின் “ஐ” படத்தில் மேக்கிங் கேமராமேனாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' பெரிய பழுவேட்டரையர் - சின்ன பழுவேட்டரையர் தோற்றத்தில் மிரள வைத்த சரத்குமார் - பார்த்திபன்
சென்னை, தலக்கோணம், ஆந்திரா கர்னூல் மாவட்டம் மற்றும் கோவா முதலாக இதுவரை படப்பிடிப்பு நடத்தப்படாத இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு திரைபிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.