vijay poster : 'உமது ஆட்சி நடக்கும் தலைவா'... விஜயை முதல்வர் வேட்பாளராக்கிய ரசிகர்கள் ...

By Kanmani P  |  First Published Jan 1, 2022, 4:47 PM IST

 Vijay poster : புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ள விஜய் ரசிகர்கள் புவியில் உமது ஆட்சி நடக்கும் என குறிப்பிட்டு கோவை ரயில்நிலையம் அருகே போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.


முன்னணி நடிகர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு அரசியல் தலைவர்களாக தங்களை பரிமானித்துக்கொள்வது வழக்கமான ஒன்றாகி விட்டது. அந்த வகையில்  ஏற்கனவே ரஜினி, கமல் அரசியலில் என்ட்ரி கொடுத்து விட்டனர். ஆனால் ரஜினிகாந்த தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு தான் துவங்கிய மக்கள் இயக்கம் என்னும் கட்சியை களைப்பதாகவும், அரசியல் நுழைய விருப்பம் இல்லையென்றும் கூறி பின் வாங்கி விட்டார். இவர்களை தவிர தற்சமயம் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நடிகர்கள் அஜித், விஜய். இவர்களில் அஜித் தனக்கும் அரசியலுக்கும் வெகுதூரம் என கூறிவிட, விஜயை எப்படியாவது அரசியல் தலைவராக்கி விடுவது என அவரது ரசிகர்களும், விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் பெரும் முயற்ச்சி செய்து வருகின்றனர். இதற்காக  விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிய விஜயின் தந்தை தேவையான ஏற்பாடுகளையும் செய்து விட்டார்.

பின்னர் தனது பெயரை பயன்படுத்த நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவிக்க இக்கட்சியின் மாநில தலைவர் பத்மநாபன், பொருளாளரான விஜய்யின் தாய் ஷோபா ஆகியோர் ராஜினாமா செய்தனர்.இதனால் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிய வேண்டாம் என்று சந்திரசேகர் கடந்த நவம்பர் மாதம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார்.. 

Tap to resize

Latest Videos

ஆனால் ரசிகர்கள் விடுவதாக இல்லை கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் போட்டியிட்ட விஜய் ரசிகர்கள் 121 இடங்களில் வெற்றிபெற்று கவனம் ஈர்த்திருக்கிறார்கள். இவர்களை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து கூறியிருந்தார்.

விஜயை அரசியலுக்கு வரவைக்கும் நோக்கில் செயல்பட்டு வரம் அவரது ரசிகர்கள் அடுத்தாக நகராட்சி தேர்தலுக்கும் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில்  புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ள விஜய் ரசிகர்கள் புவியில் உமது ஆட்சி நடக்கும் என குறிப்பிட்டு கோவை ரயில்நிலையம் அருகே போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

click me!