
சமீபத்தில் வெளியாகி தாறுமாறு வெற்றி பெற்ற படம் ஜெய் பீம். இந்த படம் பட்டி தொட்டியெல்லாம் பரவியதோடு பல சர்ச்சைகளுக்கும் உள்ளது. இந்த படத்தில் லாக்கப்பில் உயிரிழக்கும் நாயகனுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வக்கீல் சந்துருவிடம் கொண்டு செல்லும் மிகமுக்கிய கேரக்டரான டீச்சர் ரோலில் ரஜிஷா விஜயன் நடித்திருந்தார். ரஜிஷா விஜயன். தற்போது கார்த்திக்கு ஜோடியாக 'சர்தார்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இவர் ஏற்கனவே தனுஷின் கர்ணன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். முன்னதாக மலையாள திரை உலகில் பிரபலமான இவர் 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் நடித்து சூப்பர்ஹிட்டான 'hello june' திரைப்படம் தற்போது தமிழில் தயாராகி வருகிறது.
மலையாளத்தில் ஹிட்டான 'ஜோசப்' படம் மூலம் புகழ்பெற்று தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு வந்த ஜோஜு ஜார்ஜ் இந்தப்படத்தில் ரஜிஷா விஜயனின் தந்தையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஹமது கபீர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களை நவீன் முத்துசாமி எழுதியுள்ளார். ஆன்ட் அண்ட் எலிபன்ட்ஸ் சினிமாஸ் (Ants to elephants cinemas) நிறுவனம் சார்பில் அனில் கே.ரெட்டி மற்றும் வி.ஜெயபிரகாஷ் ஆகியோர் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.
இந்நிலையில், இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதி, இயக்குநர் வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன், வைபவ், எடிட்டர் பிரவீன் ஆகியோர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.