Jan 14 release movies : என்னது!பொங்கல் அன்று இரண்டு படங்கள் தானா? ...ஒரே நாளில் திரைக்கு வரும் தனுஷ், பிரபாஸ்!

Kanmani P   | Asianet News
Published : Jan 01, 2022, 02:56 PM ISTUpdated : Jan 01, 2022, 03:01 PM IST
Jan 14 release movies : என்னது!பொங்கல் அன்று இரண்டு படங்கள் தானா? ...ஒரே நாளில் திரைக்கு வரும் தனுஷ், பிரபாஸ்!

சுருக்கம்

Jan 14 release movies : பொங்கல் துவங்கும் ஜனவரி 14 -ம் தேதி தனுஷின் மாறன் மற்றும் பிரபாஸின் Radhe Shyam ஆகிய இரு படங்கள் மட்டுமே ரிலீஸாகவுள்ளது.

ஜனவரி 2022-ல் அஜித்தின் வலிமை, ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் , ஹிப்ஹாப் ஆதியின் அன்பறிவு, பிரபாஸின் Radhe Shyam, தனுஷின் மாறன், அருண்விஜயின் பார்டர், அதர்வாவின் குருதி ஆட்டம், விஷால் கிருஷ்ணாவின் வீரமே வாகை சூடவா, பிரபு தேவாவின் தேள், விக்ரமின் துருவ நட்சத்திரம், பிரபு தேவாவின் பகிரா, பார்வதி நாயரின் ரூபன், ஜீவன் பாம்பாட்டம், அஸ்வினி பிட்ஷா 3, நாசரின் வாய்தா, சிவாவின் காசேதான்  கடவுளடா உள்ளிட்ட படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆர் ஆர் ஆர் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
  
இந்த படங்களில் பெரும்பாலானவை பொங்கல் விருந்து என சொல்லப்படடாலும் இரண்டு படங்கள் மட்டுமே பொங்கல் அன்று ரிலீஸ் ஆகவுள்ளது. அதாவது தனுஷின் மாறன் மற்றும் பிரபாஸின் Radhe Shyam ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகவுள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள மாறன் படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பேட்ட, மாஸ்டர் படங்களை தொடர்ந்து அவர் நடிக்கும் மூன்றாவது தமிழ்படம் இதுவாகும்.

மேலும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

பிரபாஸின் Radhe Shyam  படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja hegde) நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?