விஸ்வரூபம் எடுக்கும் சுஷாந்த் விவகாரம்: வெளவெளத்து போன பாலிவுட் ஸ்டார்ஸ்... காய் நகர்த்தும் காங்கிரஸ்!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 25, 2020, 6:55 PM IST
Highlights

சுஷாந்த் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென உ.பி. முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். 

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 34 வயதான சுஷாந்த் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து அவருடைய ரசிகர்கள் இதுவரை மீளவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த சுஷாந்த், இந்தியா முழுவதும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். பாலிவுட்டில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வந்த சுஷாந்த், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்தி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. 

 

இதையும் படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!

இந்நிலையில், பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால் சுஷாந்திற்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்பட்டதாகவும், அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் பல பகீர் தகவல்கள் வெளியாகின. பாலிவுட்டில் எப்போதுமே வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம். புதிதாக வருபவர்களை பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகளின் வாரிசுகள் வளரவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பல ஆண்டுகளாக எழுந்துவருகிறது. இதனால் கடந்த 6 மாதமாகவே சுஷாந்த் மன உளைச்சலில் இருந்ததாக தெரியவந்துள்ளது. 

 

இதையும் படிங்க: 

சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் பல மர்மங்கள் மறைந்திருப்பதாக  கருதப்படுவதால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சுஷாந்தின் முன்னாள் காதலி, முன்னாள் பிசினஸ் மேனேஜர், குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கி வருகின்றனர். மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கையில் கூட சுஷாந்த் தூக்கில் தொங்கியதால் மூச்சு முட்டி உயிரிழந்ததாக திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. 

ஆனால் பாலிவுட்டில் அதிகரித்து வரும் நெபோடிசத்திற்கு எதிராகவும், அதை ஆதரிக்கும் கரண் ஜோஹர், சல்மான் கான் போன்றவர்களுக்கு எதிராகவும் கண்டனங்கள் வலுத்து வருகின்றனர். அதே நேரம், சுஷாந்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதையும் படிங்க: பிரபல நடிகருடன் ஜோடி போட்ட சாய் பல்லவி... வயிற்றெரிச்சலில் வாயை விட்ட ராஷ்மிகா மந்தனா...!

சுஷாந்த் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென உ.பி. முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். பீகார் இளைஞர் காங்கிரஸ் அணி தலைவரான லாலன் குமார், முன்னாள் ஆளுநரான நிகில் குமார் உள்ளிட்ட பலரும் இதே கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். விஸ்வரூபம் எடுக்கும் சுஷாந்த் பிரச்சனையால் பிரபலங்கள் பலர் கலக்கத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!