அந்த ஒரு டயலாக்கால் லியோ படத்துக்கு வந்த புது சிக்கல்... படக்குழு மீது கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

By Ganesh A  |  First Published Oct 7, 2023, 9:28 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்திற்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டு உள்ளது.


லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் மிஷ்கின், பாபு ஆண்டனி, கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அனுராக் கஷ்யப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

லியோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் கடந்த அக்டோபர் 5-ந் தேதி லியோ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் யூடியூப்பில் ஒரே நாளில் 32 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்தது.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இது ஒருபுறம் இருக்க இந்த டிரைலரில் நடிகர் விஜய் ஒரு காட்சியில் கெட்ட வார்த்தை பேசுவதை மியூட் செய்யாமல் அப்படியே வெளியிட்டு இருந்தனர். விஜய் போன்ற உச்ச நட்சத்திரம் இப்படம் கெட்ட வார்த்தை பேசி நடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதோடு, அதற்கு எதிர்ப்பும் கிளம்பிய வண்ணம் உள்ளன. தற்போது இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது.

லியோ படக்குழு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. லியோ பட டிரெய்லரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தையை நீக்கக்கோரி அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நடிகர் விஜய் முன்னுதாரணமாக செயல்படாமல் ஆபாச வார்த்தையை பயன்படுத்தினால் அது நிஜ வாழ்க்கையிலும் எதிரொலிக்கும் என்பதால், டிரெய்லரை தணிக்கை செய்யாமல் யூடியூபில் வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்...ரெக்கார்ட் மேக்கர் ஆன தளபதி... ஜெயிலர் பட டிரைலரின் ஒட்டுமொத்த சாதனையை ஒரே நாளில் அடிச்சுதூக்கிய லியோ!

click me!