நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் மிருணாள் தாக்கூர், முதன்முறையாக ஜோடி சேரும் பான்-இந்தியா திரைப்படமான 'hi நான்னா' ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் இரண்டாவது பாடலை, சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டார்.
அப்பா-மகளின் அழகான, உணர்ச்சிகரமான பயணத்தை 'hi நான்னா' சித்தரித்துள்ளது. ஷௌர்யுவ் இயக்குநராக அறிமுகமாகும் இத்திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிக்கின்றனர். நானியின் மகளாக கியாரா கண்ணா நடிக்கிறார்.
முதல் பாடலான 'நிழலியே' நானி மற்றும் மிருணால் தாக்கூர் ஜோடிக்கு இடையேயான அருமையான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தி 'hi நான்னா' திரைப்படத்தின் இனிமையான இசைப் பயணத்தை தொடங்கி வைத்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டின் ஒரு பகுதியாக, இரண்டாம் பாடலான 'கண்ணாடி கண்ணாடி'-யை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
"அப்பா-மகள் உறவு என்பது தெய்வீகமானது. நானி நடிக்கும் 'hi நான்னா' படத்தில் இடம்பெற்றிருக்கும் 'கண்ணாடி கண்ணாடி' பாடல் அனைத்து தந்தைகள் மற்றும் மகள்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் ஒரு உணர்வு பூர்வமாக அமைத்துள்ளது. தனி ஒருவனாக மகளை அன்புடன் வளர்க்கும் தந்தை மற்றும் அந்த குழந்தைக்கு இடையேயான பந்தத்தை இந்த பாடல் மிகவும் அழகாக வெளிப்படுத்துகிறது. மதன் கார்க்கியின் வரிகள் மனதை தொடுகின்றன. இப்பாடலுக்கு உணர்ச்சித் ததும்ப இசையமைத்துள்ள ஹேஷாம் அப்துல் வஹாப், அதை மிகவும் உயிரோட்டத்துடன் பாடியுள்ளார்.
முழு நீள குடும்ப படமான 'hi நான்னா', சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில், பிரவீன் அந்தோணியின் படத்தொகுப்பில் உருவாகிறது. அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்புக்கு பொறுப்பேற்றுள்ளார். சதீஷ் ஈ வி வி நிர்வாக தயாரிப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான் இந்தியா திரைப்படமாக இந்த ஆண்டு டிசம்பர் 21 அன்று 'hi நான்னா' வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.