தலைவர் 170 படப்பிடிப்பு.. இடையில் ரசிகர்களோடு ஒரு குட்டி உரையாடல் - வெள்ளை வேஷ்டி சட்டையில் சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்து பல சாதனைகளை புரிந்தது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது அடுத்த பட படப்பிடிப்பில் களமிறங்கியுள்ளார். 


சூர்யா அவர்களின் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது 170 வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சுமார் 32 ஆண்டுகள் கழித்து அவருடன் இணைந்து பாலிவுட் உலகின் சாஹின்சாவாக விளங்கும் அமிதாப்பச்சன் அவர்கள் நடித்த வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக பிரபல நடிகர் பகத் பாசில் அவர்கள் நடிக்க உள்ளார். மேலும் பிரபல நடிகைகள் ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் ரானா அவர்களும் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். 

Latest Videos

டைனோசர் முட்டை... சிம்பு பட பாடல்.! அதிரடியில் மட்டும் அல்ல ஹுமரிலும் டாப் தான்! 'அயலான்' டீசர் வெளியானது!

சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தில் படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான ஒரு சுவாரசியமான காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. படப்பிடிப்பின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரங்கிற்கு அருகில் இருந்த ரசிகர்களை கண்டு சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த சந்திப்பின்போது அங்கு வந்த ரசிகர் ஒருவர் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். வெள்ளி நிற வேஷ்டி மற்றும் சட்டையில் அட்டகாசமாக நின்ற சூப்பர் ஸ்டாரை கண்டு அனைவரும் மகிழ்ச்சியாக பேசி சென்றனர். 

அரண்மனை போன்ற வீடு முதல் ஐடி கம்பெனி வரை... அமெரிக்காவில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியனின் சொத்து மதிப்பு

click me!