
சமீப காலமாகவே, சில மர்மநபர்கள்... ட்விட்டர் பக்கத்தில் இல்லாத பிரபலங்களை தேடி பிடித்து, அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் இணைந்தது போல் கூறி, அவதூறு பரப்பும் வகையில் சில கருத்துக்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் பிரபல நடிகர் செந்தில் தன்னுடைய பெயரில் போலி கணக்கு துவங்கி அவதூறு பரப்ப படுவதாக புகார் அளித்துள்ளார்.
மேலும் செய்திகள்: திரையுலகினரை கலங்க வைத்த மரணம்..! விபத்தில் சிக்கிய தேசிய விருது நடிகர் உயிரிழப்பு..!
இயக்குனர் மணிரத்னம் ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய பிறந்தநாள் அன்று இணைந்ததாக கூறியதை தொடர்ந்து, அவரது மனைவி சுஹாசினி இதனை மறுத்தது மட்டும் இன்றி, இது தன்னுடைய கணவர் பெயரில் உருவாக்க பட்ட போலி கணக்கு ரசிகர்கள் யாரும் பின்தொடர வேண்டும் என கூறியிருந்தார். இதற்க்கு நடிகை ராதிகா உட்பட பலர் தங்களுடைய கண்டனங்களை தெறித்திருந்தனர். அதே போல் கடந்த வாரம் இதுவரை 800 க்கும் அதிகமான படங்களில் குணச்சித்திர வேடத்திலும், காமெடியனாகவும் நடித்துள்ள சார்லி ட்விட்டர் பக்கத்தில் இணைந்ததாக போலி கணக்கு ஒன்று சமூக வலைத்தளத்தில் உலா வர, அவர் உடனடியாக இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
மேலும் செய்திகள்: செம்ம ஹாட்... கலந்து பறக்கும் முடி... மாடர்ன் உடையில் மலைக்க வைக்கும் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!
இந்த புகாரின் கொடுத்த 30 நிமிடத்தில், இவரது பெயரில் உருவாக்க பட்ட போலி கணக்கு சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பிலும் கூறியிருந்தார். இவரை தொடர்ந்து தற்போது பிரபல காமெடி நடிகர் செந்தில், காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
மேலும் செய்திகள்: அசப்பில் நடிகை அஞ்சலி மாதிரியே இருக்கும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன்..! ஆச்சர்யப்பட வைக்கும் போட்டோஸ்..!
அதில் அவர் கூறியுள்ளதாவது, தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு அதன்முலம் தமிழக அரசு மீது அவதூறு பரப்பும் வகையில் சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும், தன் பெயரில் உள்ள போலி டுவிட்டர் கணக்கை நீக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய, நடிகர் செந்தில்... "டாஸ்மார்க்கை எதிர்த்து நான் பதிவிட்டதாக கூறினார்கள். நான் அவ்வாறு எந்த பதிவையும் பதிவிடவில்லை". சாதாரண கணக்கே எனக்கு தெரியாது எப்படி எனக்கு சமூக வலைத்தளத்தில் கணக்கிருக்கும் என பேசியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.