அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கு.... குட் நியூஸ் சொன்ன விக்ரம் பட வில்லனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

Ganesh A   | Asianet News
Published : Dec 29, 2021, 09:27 PM IST
அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கு.... குட் நியூஸ் சொன்ன விக்ரம் பட வில்லனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

சுருக்கம்

விக்ரமின் (Vikram) கோப்ரா (cobra) பட வில்லனுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கும் தகவலை அறிந்த ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வித்தியாசமான கதை அம்சம் கொண்ட சூப்பர் ஹிட்  படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தற்போது சியான் விக்ரம் நடித்து வரும் படம் கோப்ரா. 

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் (Irfan Pathan). இப்படத்தில் அவர் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். 

இர்பான் பதான் கடந்த 2016-ம் ஆண்டு சஃபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு கடந்த 2016-ம் ஆண்டே ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இம்ரான் கான் என பெயரிட்டிருந்தனர்.

இந்நிலையில், இர்பான் கான் - சஃபா தம்பதிக்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை டுவிட்டரில் பகிர்ந்துள்ள இர்பான் பதான், 2வது மகனுக்கு சுலைமான் கான் என பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறியுள்ள இர்பான் பதான், குழந்தையை கையில் தூக்கி வைத்தவாறு இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!