D.Imman Divorce: 'தனியுரிமையில் தலையிட வேண்டாம்'...மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் வெளியிட்ட பதிவு ...

Kanmani P   | Asianet News
Published : Dec 29, 2021, 02:21 PM IST
D.Imman Divorce:  'தனியுரிமையில் தலையிட வேண்டாம்'...மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் வெளியிட்ட பதிவு ...

சுருக்கம்

 D.Imman Divorce : எங்கள் நலம் விரும்பிகள், இசை ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் அனைவரையும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நூறு படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள டி.இமான் முதல் முதலில் இசையமைத்த படம் காதலே சுவாசம்.ஆனால் இந்த படம் சில காரணங்களால் வெளிவரவில்லை.முதல் படமாக வெளிவந்தது விஜயின் தமிழன்.
 அவரது இசைப் பயணத்தில் ‘கும்கி’ பெரிய பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. அதன் பிறகு இமான் தொட்ட படங்கள் எல்லாம் ஹிட். மண் மணம் மாறாமல் அவர் கொடுக்கும் ஒவ்வொரு பாடல்களும் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகின்றன. ‘மைனா’, ‘வெள்ளக்கார துரை’ என பல மாஸ் ஹிட் ஆல்பங்களை வழங்கி கோடம்பாக்கம் வட்டாரத்தில் முன்னணி இசையமைப்பாளராக அவர் இடம்பிடித்தார்.

ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படம் இமானுக்கு நூறாவது படமாகும். வழக்கமாக டி. இமான் இசையமைக்கும் படத்தில் ஹீரோக்களை ஒரு பாட்டாவது பாட வைத்து விடுவார். இவர் இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களுக்கு இமான் இசையமைத்து வருகிறார்.

இசையமைப்பாளர் டி. இமான் கடந்த 2008-ம் ஆண்டு மோனிகா என்பவரை  திருமணம் செய்து கொண்டார். சிலகாரணங்களால்  கடந்த ஆண்டு நவம்பர் மாதமே இருவரும் விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது திருமண வாழ்க்கை முறிவு குறித்து மனம் திறந்துள்ளார் டி.இமான். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்;  'எனது நலம் விரும்பிகள் மற்றும் தீவிர இசை ஆர்வலர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்ததற்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எங்களின் வாழ்க்கை வெவ்வேறு பாதைகளில் செல்லவே, மோனிகா ரிச்சர்டும் நானும் நவம்பர் 2020 முதல் பரஸ்பர சம்மதத்துடன் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து, இனி கணவன் மனைவியாக இருக்க முடியாது என்று முடிவெடுத்தோம்.

எங்கள் நலம் விரும்பிகள், இசை ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் அனைவரையும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி" என்று பதிவு செய்திருக்கிறார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?
ரன்வீர் சிங்கின் கடைசி 6 படங்கள்: பிளாக்பஸ்டரை விட பிளாப்கள் அதிகம்