ஹாலிவுட் பட சீனை அப்படியே காப்பி அடிச்ச கோப்ரா படக்குழு... வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு விளாசும் நெட்டிசன்கள்

Published : Sep 02, 2022, 10:50 AM IST
ஹாலிவுட் பட சீனை அப்படியே காப்பி அடிச்ச கோப்ரா படக்குழு... வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு விளாசும் நெட்டிசன்கள்

சுருக்கம்

Cobra movie : கோப்ரா படத்தின் இரண்டாம் பாதியில் அந்த விக்ரமிடம் விசாரணை நடத்தப்படும் படியான காட்சி ஒன்று இடம்பெற்று இருக்கும். அது ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்ட காட்சி என தெரியவந்துள்ளது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, முதன்முறையாக நடிகர் விக்ரம் உடன் இணைந்து பணியாற்றிய படம் கோப்ரா. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். மேலும் வில்லனாக மலையாள நடிகர் ரோஷன் ஆண்ட்ரூஸும், இண்டர்போல் அதிகாரியாக இர்பான் பதானும் நடித்திருந்தனர்.

தசவதாரம் கமல் போல் ஏராளமான கெட் அப்களில் விக்ரம் நடித்திருந்ததால் கோப்ரா படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படம் முதல் நாளே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. படத்தின் கதையும் திரைக்கதையும் புதுமையாக இருந்த போதிலும் படத்தின் நீளம் தான் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

3 மணிநேரத்திற்கு மேல் இருப்பதால் படம் போரடித்து விடுவதாக பலரும் தெரிவித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு படத்தின் 20 நிமிட காட்சியை நீக்கிவிட்டு நேற்று மாலை முதல் திரையிடப்பட்டு வருகிறது கோப்ரா திரைப்படம். இதனை ரிலீசுக்கு முன்பே செய்திருந்தால் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 2.30 மணிநேரத்துக்கு மேல.. படம் எடுத்தா பாம்பு (கோப்ரா) கூட தோத்துபோகும்- அன்றே கணித்த விஜய்.. வைரலாகும் வீடியோ

இப்படத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில்ந் அடித்திருப்பார். அதில் கணக்கு வாத்தியாராக நடித்திருக்கும் ஒரு விக்ரமிற்கு ஹேலுசினேசன் பாதிப்பும் இருக்கும். கோப்ரா படத்தின் இரண்டாம் பாதியில் அந்த விக்ரமிடம் விசாரணை நடத்தப்படும் படியான காட்சி ஒன்று இடம்பெற்று இருக்கும். அதில் ஆனந்த்ராஜ், மியா ஜார்ஜ் ஆகியோரோடு சேர்ந்து அந்நியன் பட பாணியில் விக்ரம் விதவிதமாக பேசுவது போன்று ஒரு காட்சி இருக்கும். படத்தில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட காட்சி என்றும் அதனை சொல்லலாம்.

இந்நிலையில், அந்த காட்சியை அப்படியே ஹாலிவுட் படத்தில் இருந்து இயக்குனர் அஜய் ஞானமுத்து காப்பி அடித்துள்ளது தெரியவந்துள்ளது. ஹாலிவுட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீசான படம் ஒன்றில் அதே போன்று ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அது அப்படியே கோப்ரா படத்திலும் இடம்பெற்றுள்ளதை பார்த்த ரசிகர்கள் “என்னங்கடா அப்படியே காப்பி அடிச்சு வச்சிருக்கீங்க” என ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... இராவணன் டூ பொன்னியின் செல்வன்... பாடிய பாடல்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்! யார் இந்த பம்பா பாக்யா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!