முதலமைச்சர் விழாவில் கவனம் ஈர்த்த ப்ரியா ஆனந்த்... பிங்க் நிற பட்டுச் சோலையில் கொள்ளை அழகு... வைரலாகும் புகைப்படங்கள்...!

Published : Nov 25, 2019, 06:25 PM IST
முதலமைச்சர் விழாவில் கவனம் ஈர்த்த ப்ரியா ஆனந்த்... பிங்க் நிற பட்டுச் சோலையில் கொள்ளை அழகு... வைரலாகும் புகைப்படங்கள்...!

சுருக்கம்

ஏராளமானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ப்ரியா ஆனந்த் அதிக கவனம் ஈர்த்தார். பிங்க் நிற பட்டுப்புடவையில் சேலை கட்டிய தென்றலாக காட்சியளித்த ப்ரியா ஆனந்த் இளைஞர்களை சொக்கவைத்தார். 

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் பல வெற்றிப்படங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளரான ஐசரி கணேஷ் பல ஆண்டுகளாக தரமான படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் இந்நிறுவனம் தயாரித்த எல்.கே.ஜி., கோமாளி, பப்பி ஆகிய படங்கள் அனைவரது வரவேற்பையும் பெற்றது. எனவே இந்த 3 படங்களுக்கும் நேற்று ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வெற்றி விழா நடைபெற்றது. 

திரைப்பட விழாவில் முதன் முறையாக பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி, 3 படங்களில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த், ஆர்.ஜே.பாலாஜி, கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கவுதம் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் சீறு, சுமோ படங்களின் டிரைலரும், ஜோஸ்வா படத்தின் டீசரும் ஒளிபரப்பட்டது. 

ஏராளமானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ப்ரியா ஆனந்த் அதிக கவனம் ஈர்த்தார். பிங்க் நிற பட்டுப்புடவையில் சேலை கட்டிய தென்றலாக காட்சியளித்த ப்ரியா ஆனந்த் இளைஞர்களை சொக்கவைத்தார். சிம்பிள் அண்ட் க்யூட்டாக வந்த பிங்க் நிற பட்டுப்புடவையில் வந்த ப்ரியா ஆனந்த்தின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

அதே புடவையில் வளைத்து, வளைத்து போஸ் கொடுத்து போட்டோ ஷூட் ஒன்றையும் ப்ரியா ஆனந்த் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களைப் பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள், "பொண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்" என வர்ணித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?