ரஜினியின்‘2.0’ வுக்கும் கட்டப்பஞ்சாயத்தும் கட் அவுட் பஞ்சாயத்தும் கண்டிப்பா இருக்கு...

By vinoth kumarFirst Published Nov 11, 2018, 10:17 AM IST
Highlights

இனி சினிமாவில் அரசியல் பேசினால் என்ன ஆகும் என்று சர்கார் மூலம் சம்பவம் செய்து காட்டிய முதல்வர், விஜய் மட்டுமல்ல ரஜினி, கமல் யார் அரசியல் பேசினாலும் சும்மா இருக்கமாட்டோம் என்று எச்சரிக்கும் பாணியில் பேசத்துவங்கியிருக்கிறார்.

இனி சினிமாவில் அரசியல் பேசினால் என்ன ஆகும் என்று சர்கார் மூலம் சம்பவம் செய்து காட்டிய முதல்வர், விஜய் மட்டுமல்ல ரஜினி, கமல் யார் அரசியல் பேசினாலும் சும்மா இருக்கமாட்டோம் என்று எச்சரிக்கும் பாணியில் பேசத்துவங்கியிருக்கிறார்.

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியவரின் குரலில் வழக்கத்தை விட கடுமையான கோபம் இருந்தது. அந்தப்பேச்சில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய், கமல், ரஜினி என்று ஒருவரும் தப்பவில்லை.

சர்கார் பேனரை அ.தி.மு.க.வினர் கிழிக்கவில்லை. பேனர்களைக் கிழித்ததும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் பொதுமக்கள்தான். 100 ரூபாய் சினிமா டிக்கட்டை 1000 ரூபாய்க்கு விற்று மக்கள் ரத்தத்தை நடிகர்கள் உறிஞ்சுகிறார்கள். ரஜினியும் கமலும் சர்கார் விவகாரத்தில் தேவையில்லாமல் கருத்துச் சொல்கிறார்கள். 64 வயதுக்குப் பிறகு சினிமாவில் எடுபடமாட்டோம் என்று தெரிந்து கமல் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

ரஜினி தன் சுயநலத்துக்காக என்னவேண்டுமானாலும் செய்பவர். யோக்கியர்  மாதிரி பேசுகிற ரஜினி  500 கோடியில்[2.0] அவரை வைத்துப் படம் தயாரிக்கிறாரே ஒருவர், அந்தத் தயாரிப்பாளருக்கு அவ்வளவு பெரிய தொகை எங்கிருந்து வந்தது என்று சொல்ல முடியுமா? என்கிறார் முதல்வர்.

ஆக வரும் 29 ரிலீஸாகவிருக்கும் ‘2.0’ வுக்கும் சர்கார் போல கட்டப்பஞ்சாயத்தும் கட் அவுட் பஞ்சாயத்தும் கண்டிப்பா இருக்கு.

click me!