சர்கார் 4 நாள் கலெக்சன் ரூ.150 கோடி! வேதாளம் மொத்த கலெக்சன் ரூ.126 கோடி! பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்!

By vinoth kumarFirst Published Nov 11, 2018, 9:32 AM IST
Highlights

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படம் 4 நாட்களில் உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படம் 4 நாட்களில் உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக சர்கார் திரைப்படம் செவ்வாயன்று வெளியானது. படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்த காரணத்தினால் தமிழகத்தில் உள்ள 99 விழுக்காடு திரையரங்குகள் சர்கார் படத்தையே வெளியிட்டன. இதே போல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், டெல்லி என பல நகரங்களிலும் சர்கார் அதிக திரையரங்குகளில் வெளியானது. வெளிநாடுகளிலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளிலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கையிலும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வழக்கத்தை விட அதிக திரையரங்குகளில் சர்கார் ரிலீஸ் செய்யப்பட்டது.

 

ஒரு சில இடங்களை தவிர பெரும்பாலான திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் முதல் நாளில் ஹவுஸ் புல்லாகவே இருந்தது. அதிலும் தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும் முதல் நாள் சர்கார் பட்டையை கிளப்பியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது, நாளிலும் கூட சர்கார் வசூல் நன்றாகவே இருந்தது. அ.தி.மு.கவுடனான பிரச்சனை காரணமாக மூன்றாவது நாள் தமிழகத்தில் மட்டும் வசூல் பாதிக்கப்பட்டது. 

இதே போன்று 4வது நாளிலும் கூட எதிர்பார்த்த வசூல் இல்லை. ஆனால் மற்ற மாநிலங்கள் மற்றும் சர்வதேச நாடுகளில் சர்கார் வசூல் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாரிக் குவித்துக் கொண்டிருந்தது. கடந்த நான்கு நாட்களில் தமிழகத்தில் மட்டும் சர்கார் சுமாட்ர 76 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆந்திராவில் 11 கோடி ரூபாயும், தெலுங்கானாவில் ஆறு கோடி ரூபாயும் சர்கார் வசூலித்துள்ளது. இதே போன்று கர்நாடகா, கேரளாவிலும் சர்கார் வசூல் அமோகமாக உள்ளது. வெளிநாடுகளிலும் விஜய் படத்திற்கு எப்போதும் இருக்கும் அளவிலான வரவேற்புடன் ஒட்டு மொத்தமாக கடந்த நான்கு நாட்களில் சர்கார் ரூ.150 கோடியை வசூலித்துள்ளது.

இந்த தொகை விஜயின் தெறி ஒட்டுமொத்த கலெக்சனை விட அதிகமாகும். சொல்லப்போனால் நடிகர் அஜித்தின் கடைசி வெற்றிப் படமான வேதாளத்தின் லைப் டைம் கலெக்சனானா ரூ.126 கோடியை விட மிக அதிகமாகும். அதாவது அஜித்தின் வேதாளம் ஒட்டு மொத்தமாக வசூல் செய்த 126 கோடி ரூபாயை நான்கே நாட்களில் விஜயின் சர்கார் முந்தியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் 200 கோடி ரூபாயை நோக்கி சர்கார் முன்னேறுகிறது.

click me!