இவங்க எல்லாம் என்ன ஜெயலலிதாவா ? எடப்பாடி குரூப்பை பஞ்சராக்கிய ரஜினிகாந்த் !!

Published : Aug 13, 2018, 11:08 PM ISTUpdated : Sep 09, 2018, 08:24 PM IST
இவங்க எல்லாம் என்ன ஜெயலலிதாவா ?  எடப்பாடி குரூப்பை பஞ்சராக்கிய ரஜினிகாந்த் !!

சுருக்கம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்கில்  இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் பங்கேற்ற நிலையில், தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் வந்திருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பிய நடிகர் ரஜினிகாந்த், இவர்கள் எல்லாம் என ஜெயலலிதாவா ? என காட்டமாக பேசினார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில்  நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. . இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  மற்றும் கருணாநிதி குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் இதில் கலந்து கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் கருணாநிதியின்  உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் , திமுக தலைவர் கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்துக் கூட  பார்க்க முடியவில்லை என்றார்.

இலக்கியம், சினிமா என பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் கருணாநிதி. பழையவராகவோ, புதியவராகவோ இருந்தாலும், கருணாநிதி இல்லாது அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியவர் கருணாநிதி என்றும் அவர் புகழாரம் சூட்டினார்..

பல வஞ்சனைகள்,  சூழ்ச்சிகள் போன்றவற்றை தாண்டி அரசியலில் ஜொலித்த கருணாநிதியால் அரசியலுக்கு வந்தோர் லட்சம் பேர் உள்ளனர் என்றார்.

.

இந்த இடத்தில்  நான் இதை சொல்லியே ஆக வேண்டும் என தெரிவித்த ரஜினிகாந்த், கருணாநிதியின் இறுதிச் சடங்கிற்கு ராகுல் காந்தி, பல மாநில முதலைமைச்சர்கள்  என ஒட்டு மொத்த இந்தியாவே வந்த நிலையில்  தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் வந்திருக்க வேண்டாமா ?  என கேள்வி எழுப்பினார்.

கருணாநிதி எத்தனை பெரிய ஜாம்பவான் என கூறிய ரஜினி, அவருக்கு உரிய  மரியாதை தர வேண்டாமா ? என தெரிவித்த  ரஜினிகாந்த்  இவங்க எல்லாம் என்ன ஜெயலலிதாவா என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!