நானே களத்தில் இறங்கியிருப்பேன்… எடப்பாடியை நேரடியாக எதிர்க்கும் ரஜினிகாந்த் !!

Published : Aug 13, 2018, 10:11 PM ISTUpdated : Sep 09, 2018, 08:26 PM IST
நானே களத்தில் இறங்கியிருப்பேன்… எடப்பாடியை நேரடியாக எதிர்க்கும் ரஜினிகாந்த் !!

சுருக்கம்

நானே களத்தில் இறங்கியிருப்பேன்… எடப்பாடியை நேரடியாக எதிர்க்கும் ரஜினிகாந்த் !!

திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததையடுத்து அவரது உடலை அண்ணா சதுக்கத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.. ஆனால் அதை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, காமராஜர் நினைவிடத்தில் இடம் ஒதுக்கித் தருவதாக கூறினார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததோடு, கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கித் தரவேண்டும் என கூறினார். நடிகர் ரஜினிகாந்த்தும் இது தொடர்பாக கோரிக்கை விடுத்திருந்தார்.



இந்நிலையில் மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு சென்னை காமராஜர் அரங்கில் திரையுலகினர் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் திரையுலகத்தை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

கருணாநிதியின் உருவப்படத்திற்கு மெழுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினியும் பங்கேற்றுப் பேசினார். அப்போது கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என உருக்கமாக தெரிவித்தார்.

50 ஆண்டுகளில் எவ்வளவு சோதனைகள், சூழ்ச்சிகள், துரோகங்கள்  எல்லாவற்றையும் வென்று திமுக., தலைவராக இருந்தவர் கருணாநிதி என்றும் , . இவரால் அரசியலுக்கு வந்தவர்கள் லட்சம் பேர். என்னுடன் நட்பு கொள், இல்லையென்றால் என்னை எதிரியாக்கி கொள் என தமிழகத்தில் அரசியல் சதுரங்கம் செய்தவர் கருணாநிதி என புகழாரம் சூட்டினார்.

.மெரினாவில் உள்ள அண்ணா சதுக்கத்தில் கருணாநிதிக்கு  இடம் கொடுக்க கோர்ட் அனுமதித்தது. நல்லவேளை நீங்கள் மேல் முறையீடு செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் நானே களத்தில் இறங்கி போராடி இருப்பேன் என அதிரடியாக தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!