"இதயத்தை நொறுக்கும் இழப்பு"..திரை விமர்சகர் கெளஷிக் மரணம்..இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

Published : Aug 16, 2022, 01:14 PM ISTUpdated : Aug 16, 2022, 01:17 PM IST
"இதயத்தை நொறுக்கும் இழப்பு"..திரை விமர்சகர் கெளஷிக் மரணம்..இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

சுருக்கம்

படுக்கையில் கௌஷிக் உணர்வற்று கிடந்துள்ளார். பின்னர் மருத்துவ பரிசோதனையில் இவர் நேற்று மதியம் மாரடைப்பால் உறக்கத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்துள்ளது

பிரபல சினிமா விமர்சகராக அறியப்படுபவர் கௌஷிக் இவர் தனியார் ஊடகங்களில் பணிபுரிந்து வந்துள்ளார். அதோடு ட்விட்டர் போன்ற சமூகவலைதள பக்கங்களில் சினிமா தொடர்பான அப்டேட்டுகளை வெளியிட்டு பிரபலமானவர் கௌஷிக். பொறியியல் பட்டதாரியான இவர் சினிமா மீதான ஆர்வம் காரணமாக சினிமாவில் தொடர்பான முதுகலை பட்டப்படிப்பை படிப்பு முடித்து பிரபல தனியார் ஊடகத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந் நிலையில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள கௌஷிக் திட்டமிட்டுள்ளார்  இதையடுத்து இது தொடர்பாக அவரது நண்பர்கள் தொடர்ந்து இவருக்கு போன் செய்துள்ளனர். ஆனால் எந்த ரெஸ்பான்ஸும் செய்யாததால் கௌஷிக்கின் அறைக்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது படுக்கையில் அவர் உணர்வற்று கிடந்துள்ளார்.  பின்னர் மருத்துவ பரிசோதனையில் இவர் நேற்று மதியம் மாரடைப்பால் உறக்கத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு...வீட்டை சுத்தி காட்டுறேன்னு கூட்டிட்டு போய் கற்பழித்தார்... பிரபல பாடகர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்

கௌஷிக்கின் மரணம் ஊடகத்துறையில் மட்டுமல்லாமல், சினிமா துறையிலும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணம் குறித்து தனுஷ், ராகவா லாரன்ஸ், சல்மான் கான், கீர்த்தி சுரேஷ், அதிதி ராவ் கைதாரி, வெங்கட் பிரபு உள்ளிட்ட  திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதோடு இவர் மரணிக்கும் சிறிது நேரத்திற்கு முன்பாக துல்கர் சல்மான் நடித்த சீதாராமன் உலக அளவில் 50 கோடி வசூலை பெற்றுள்ளதாக பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளுக்கு...பிளாப் படங்களால் சம்பளத்தை குறைத்த தனுஷ்... திருச்சிற்றம்பலம் படத்துக்கு அவர் வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா?

 

மேலும் செய்திகளுக்கு...நயன்தாராவை விட அழகு நீங்க... விக்கியின் டுவிட்டால் மெர்சலாகிப் போன ஆர்த்தி - என்ன ரிப்ளை கொடுத்தாங்க தெரியுமா?

 

 

 

 

 

 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!