திருட்டு விசிடி வருகையால்.... மூட படுகிறது கமல்ஹாசன், வந்து செல்லும் சினிமா நூலகம்....!!! 

 
Published : Jan 30, 2017, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
திருட்டு விசிடி வருகையால்.... மூட படுகிறது கமல்ஹாசன், வந்து செல்லும் சினிமா நூலகம்....!!! 

சுருக்கம்

கடந்த 1983ஆம் ஆண்டு ஒரு சாதாரண மனிதரால் சென்னை ஆர். ஏ.புறத்தில்  75 வீடியோ கேசட்டுகளுடன் தொடங்கப்பட்டது  டிக் டாக் மூவி வாடகை நூலகம், இந்த கடையின் தரத்தால் மிக குறுகிய காலத்திலேயே  35000 வீடியோ கேசட்டுக்கள் கொண்ட கடையாக மாறியது.

இந்த கடையின் ரெகுலர் கஸ்டமர் உலகநாயகன் கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோர்.  மேலும் தற்போது கூட  எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணுவர்தன் உள்பட பலர், இன்றும் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தற்போது   திருட்டு வீடியோ, ஆன்லைனில் புதிய திரைப்படம் போன்ற நவீன டெக்னால்ஜி மூலம் நடைபெற்று வரும் முறைகேடுகள் காரணமாக இந்த நூலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்துவிட்டனர். 

அதே போல சில மாதங்களிலேயே புதிய படங்கள் தொலைக்காட்சியிலும்  திரையிட படுவதால் எந்த ஒரு வியாபாரமும் இல்லாமல் இந்த கடை தற்போது நஷ்டத்தில் இயங்குகிறது.  இதன் காரணமாக இதன் உரிமையாளர் பிரகாஷ்குமார் என்பவர்   இந்த சினிமா நூலகத்தை மூடவுள்ளதாக அறிவித்துள்ளார். 

இந்த கடையை மூடினாலும் 30 ஆண்டுகளில் இந்த கடைக்கு கிடைத்த மறக்க முடியாத நினைவுகள் அதிகம் என்றும், தன்னுடைய கடைக்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள் அனைவர்க்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நூலகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் வெளிவந்த அணைத்து படங்களையும் பொக்கிஷமாக பாதுகாத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?