
மீடூ விவகாரம் அனைவரும் அறிந்த ஒன்று தான். பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தைரியமாக சொல்வதற்காக தொடங்கப்பட்டது தான் #மி டூ இயக்கம். ஹாலிவுட்டில் தொடங்கிய இந்த இயக்கம், தற்போது கோலிவுட்டையும் விட்டுவைக்கவில்லை. தமிழ் திரையுலகில் மி டூவுக்கு சலங்கை கட்டி விட்டவர் பாடகி சின்மயி. அதுவும் கவிப்பேரரசு வைரமுத்து மீது இவர் கூறிய பாலியல் புகார் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னை ஹோட்டல் ரூமுக்கு வைரமுத்து வரச்சொன்னதாக குற்றம்சாட்டி இருந்தார் சின்மயி.
இதைத் தொடர்ந்து தென்னிந்திய திரையுலக பெண்கள் மையம் சார்பில், லீனா மணிமேகலை, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார் சின்மயி. சிவப்பு வண்ண ஸ்லீவ் லெஸ் மற்றும் நெக்-லெஸ் டீசர்ட் அணிந்திருந்தார் சின்மயி. கழுத்தை ஒட்டி இரு பட்டைகள் தெரியும் வண்ணம் அவரது ஆடை இருந்தது. இதனால் சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார் சின்மயி.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார். மாதம் தோறும் செலுத்தவேண்டிய சந்தா கூட சரியாக செலுத்தவில்லை என பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர் டப்பிங் யூனியனை சேர்ந்தவர்கள். இதற்கு சின்மயி தொடர்ந்து விளக்கம் கொடுத்து வந்தார்.
தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் நிதி திரட்ட ஒரு பாடல் கச்சேரி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார் சின்மயி.
இந்த நிகழ்ச்சி இன்று 7 . 30 மணிக்கு "Ramada plaza ' வில் நடைபெற உள்ளது என்பதை சின்மயி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.